பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இலக்கிய ஏந்தல்கள் ஒப்பரிய காதலுணர்வு வயதால் முதுமையால் வாடுவ தில்லை என்று பேசப்பட்ட இலக்கிய மரபு, மறுமலர்ச்சிக் காலத்தே பாவேந்தர் பாடலில் தனிவகையான சிறப்பாக மலர்ச்சி பெற்றுள்ளது. குடும்பவிளக்கில் முதியோர் காதல்’ என்னும் பகுதியே மரபும் புரட்சியுமாகும். அப் பாடல் வருமாறு : o புதுமலர் அல்ல; காய்ந்த புற்கட்டே அவள்உ டம்பு சதிராடும் கடையாள் அல்லள்: தள்ளாடி விழும்மு தாட்டி: மதியல்ல முகம் அவட்கு, வறள்கிலம்; குழிகள் கண்கள்! எதுஎனக் கின்பம் கல்கும்? இருக்கின்றாள் என்ப தொன்றே காதற் கவிதைகளை இசைப்பாடல் வழியே கேட்கும் இக் காலத்தே, 暉 காதல் என்பது தேன்கூடு-அதைக் கட்டுவ தென்றால் பெரும்பாடு என்று இசைக்கக் கேட்கின்றோம். கபிலரின் நற்றிணைப் பாடலில், - தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச் சாந்தின் தொடுத்த தீந்தேன் போல = - (நற்றினை : 1) எனவரும் கருத்தே மிளிரக் காண்கிறோம். காதலைப் போற்றும் வளமார்ந்த சொற்களில் பட்டுக்கோட்டையார்,