பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 இலக்கிய ஏந்தல்கள் 'குழந்தைகளைப் பெறுகிறார்கள், குழந்தையின் பத் தைப் பெறுவதில்லை' என்று பெற்றோர்களைச் சாடும் மு.வ. அவர்கள், வாடாமலரில் குழந்தையைப் பற்றிப் பின்வருமாறு சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கக் காணலாம் : குழந்தையோடு தொடர்ந்து பழகினாலும் வெறுப்பு ஏற்படாது. ஏன் என்றால், குழந்தையின் மனத்தில் கரவு இல்லை; எதிர்காலத் திட்டம் இல்லை; வாழ்க்கையின் மோதலும் போராட்டமும் இல்லை.' அடுத்து, "குழந்தையை வளர்க்கும் தாய், தானும் வளர்கிறாள். ஆனால் தாயின் வளர்ச்சி எல்லாம், அன்பில், இரக்கத்தில் நெகிழ்ச்சியில், மென்மையில்" என்று குறிப்பிடும் மு.வ. பேராசிரியர் அருளப்பர் தம் மகள் தேமொழிக்கு எழுதும் கடிதத்தில், "வளரும் குழந்தையிடம் கற்றுக்கொள்ள வேண்டிய கல்வி எவ்வளவோ உண்டு. இந்த அருமையான வாய்ப்பை இழக்கவே கூடாது. இது கல்வி மட்டும் அல்ல, இணையற்ற இன்பமும் ஆகும்" என்று குறிப்பிடுவதாகக் கூறியுள்ளார். - நெஞ்சில் ஒரு முள்' என்ற நாவலிலும் குழந்தையால் பெற்றோர் பெறும் வளர்ச்சியைப் பின்வருமாறு குறிப்பிட் டிருக்கக் காணலாம் : - * t "குழந்தையை நாம் வளர்ப்பதாகச் சொல்கிறோம். கண்ணழகன் வளர்ந்தபோது எங்கள் மனம் எவ்வளவோ வளர்ந்து, பொறுமை முதலான பண்புகளைப் பெற்றுப் பண்பட்டது. ஆகவே குழந்தைகளால் பெற்றோர்கள்