இ. அr. 368 எவ்வளவோ வளர்ச்சி பெறுகிறார்கள் என்று உணர்ந்தேன்" என்று வடிவு என்ற பாத்திரம் பேசக் காணலாம்.' வாடா மலர்’ நாவலில் கதைத் தலைவன் தானப்பன் குழந்தை நறுமலரிடம் மிக்க அன்போடு குழந்தையோடு குழந்தையாகப் பழகித் தன் நண்பனிடம் இக்குழந்தை பற்றிக் கூறும் கருத்து வருமாறு : "குழந்தை என்றால் தூய்மையான மழைநீர்போல, இந்த உலகத்து மாசும் அழுக்கும் படாத தூய்மையான நீர் இது. வளர்ந்த நீயும் நானும் உப்பு மண்ணிலும் களிமண்ணிலும் விழுந்த நீர்போல மாறிவிட்டோம். சிலர் அழுக்குச் சாய்க்கடையில் விழுந்த மழைத்துளி போல் கெட்டுவிடுகிறார்கள். தவறான சூழ்நிலைகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், ச ட ங் கு க ள் முதலானவை நல்ல மனங்களைக் கெடுத்துவிடுகின்றன. நம் நறுமலரின் மனம் குழந்தை மனம், மாசு அழியாத மனம், ம்லரின் மேல் விழுந்த மழைத்துளி." டாக்டர் மு. வ. அவர்களின் குழந்தை ஈடுபாடு குறித்து மு.வ.வின் மனமறிந்து, மன நுட்:மறிந்து, செம்மையாய் எழுத்தினை வடிக்கும் இளம் நண்பர் பண்பாளர் திரு. இரா. மோகன் பின்வருமாறு எழுதியுள்ளார் : "சிந்தனைகளில் மட்டுமின்றி, மு.வ.வின் கதைகளிலும் குழந்தைக்குச் சிறப்பிடம் உள்ளது; பெற்ற மனம்", நெஞ்சில் ஒரு முள்' ஆகிய இரண்டு நாவல்களிலும் குழந்தை வளர்ப்பு முதலிடம் பெற, கள்ளே, காவியமோ?’, ‘வாடா மலர்” ஆகிய இரண்டு நாவல் களிலும் குழந்தை வாழ்வு முதலிடம் பெறுவதைக் காண்கிறோம். அவரது நாவல்களில் வரும் கதை மாங்காகம்
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/364
Appearance