பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 39 வொளியில் பார்த்தால், அன்புப் பைத்தியமாகி நிற்கும் நிலை காதலனுக்கு ஏற்படுதல் இயல்பே. மாறாத இளமை உள்ள காதலி; சிறுமிபோல் சிரிக்கின்றாள். சிரிப்பிலே பலவகை. கன்னத்திலே குழிவிழும் மாயச் சிரிப்பு அவள் சிரிப்பு. அதை சின்னப்பய மவ கெனக்கா செருக்கி நீயும் சிரிக்கையிலே கன்னத்திலே குளிவிளுது -தங்கரத்தினமே கண்டுமனம் களிக்குதடி - பொன்னுரத்தினமே என்று கிராமியக் காதலன் பேசும் வண்ணத்திற் கேட்கி றோமே, அது சாலச் சிறப்புடைத்தாகும். இத்தகைய மயக்கும் காதல் கவிஞர் பெ. தூரன் பார்விையில் ஒரு கனவுக் காட்சி தந்து மயக்குகிறது. தேனிலா ஊறுகின்ற சேல்விழிகள் யான் கண்டேன் வேனிலான்வில் போன்ற மென்புருவச் சீர்கண்டேன் புன்சிரிப்புப் புதுரோஜாப் பூத்திருக்கும் எழில் கண்டேன் கன்னக் குழிக் கவிதை கண்டு களி கொண்டேன் மதனன் குடியிருக்கும் மார்பு கண்டேன் சென்றணைக்க அதிவிரைவிற் பாய்ந் தெழுந்தேன் அடடா நான் கண்விழித்தேன். சங்க இலக்கியம் முதல் பாரதியார் காலம் வரை போற்றப்பட்ட காதல், இக்காலக் கவிஞர் குரலிலும் சிறந்து ஒலித்து உணர்வில் ஓங்கி, மறுமலர்ச்சித் தமிழினை வளப்படுத்தி வருகின்றது. நாட்டையும் சமுதாய நிலை யையும் மொழிப் பெருமையையும் பாடும் இக்காலப் புலவாகள, காலம் மறவாக் காதலையும் பல்வண்ணக்