பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் பணி முன்னுரை - இலக்கியம் வாழ்க்கையின், சமூகத்தின் ஒரு விளக்கமேயாகும். இலக்கியம் சமூகத்திலிருந்து, சமூகத் திற்காக, சமூகத்தின் அங்கமாகிய தனி மனிதர்களால் படைக்கப்படுவதுதான். நாட்டுக்கு நாடு மொழிகள் வேறுபட்டாலும், அவ்வவ் மொழிகளில் படைக்கப்படும் இலக்கியங்கள், அந்த அந்த நாட்டவரின் வாழ்க்கையைச் சித்திரித்து, அவர்களின் வாழ்க்கைச் செம்மைக்கே பாடுபடு கிறது. அழகுணர்ச்சி மிகுந்த ஆசிரியன் ஒருவனது உள்ளத்தில் உணர்ச்சியாயும், கருத்தாயும் அரும்பி, அவன் அறிவில் வளர்ந்து, பலர் சுவைத்து மகிழ, வல்லதொரு மொழியுருவம் பெற்றுத் தோன்றுகிற இவ்விலக்கியம் ஆற்றும் பணிகளை இனி விரிவாகக் காண்போம். இலக்கியத்தின் வளர்ச்சி மனிதன் புற-அக அனுபவங்களைக் கற்பனையின் துணையோடு, மொழிகளின் போர்வை போர்த்து, இலக்கியமாக்கினான். மனிதனின் சிந்தனை செம்மைப் பட்ட காலமே, இலக்கியத்தின் தோற்ற காலமாகும். அவ்வாறு அவன் படைத்த இலக்கியம் அவனுடைய பண்பு கள், சமூக, சமய, நாகரிக நிலைகள், வாழ்க்கை ஆகிய வற்றையொட்டி எழுந்தது. அவனுடைய வாழ்வும் பண்பு களும் அறிவாற்றல்களும் வளம்பெறப் பெற, அவனது இலக்கியமும் வளம் பெறலாயிற்று. பண்டை மனிதன் @T・ーI