பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 இலக்கிய ஏந்தல்கள் இயற்கை நிகழ்ச்சிகளின்பால், தான் கொண்டிருந்த வியப்பையும், அச்சத்தையும் மொ ழி மூலம் வெளியிட்டான். பல தெய்வங்களை வணங்கி வந்த அவன் ஒரே கடவுள் என்ற கொள்கையைத் தழுவி, அறவுணர்ச்சி, அழகுணர்ச்சி, இறை அன்பு, ஆகியவற்றில் வளர்ச்சி யடைந்தபோது, அவனது இலக்கியமும் அந்த வளர்ச்சியை வெளிப்படுத்தியது காதல், போர், வீரதீரச் செயல்கள் ஆகியவற்றையே பாடி வந்தவன் மெல்ல மெல்ல ஏனைய சுவைகள்கொண்ட பலவகை இலக்கியங்களைப் படைத்துக் கொள்ளலானான். கரடுமுருடாயிருந்த மொழி பலவகை களிலும் இனிமையும், நலங்கள் பலவும், ஆழ்ந்த கருத்து களை வெளியிடும் ஆற்றலும் பெற்று விளங்கலாயிற்று, இன்று இலக்கியம், கவிதை, காவியம், நாடகம், புதினம், சிறுகதை முதலிய பல சுவைகளை உடையதாயும், வாழ்க்கையின் பல துறைகளையும் தழுவி நிற்பதாயும், நிகழ்ந்த உண்மை மட்டுமன்றிக் கற்பனையுண்மையையும் கொண்டதாயும் விரிந்து விளங்குகின்றது. இன்றைய இலக்கியம் இன்றைய மனிதனையும் மனித வாழ்க்கையை யும் இனிது எடுத்துக்காட்டுகிறது. - இலக்கியத்தின் பணி - நம் பண்டைப் பெரியோர்கள் மனிதன் அடைய வேண்டிய உறுதிப் பொருள்களை அறம், பொருள், இன்பம், வீடு' என வகுத்து, அந்நான்கையும் எய்துவதற்கு இலக்கியம் வழிகாட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். இவ்வுலக வாழ்வில் எங்கும் ஊடுருவியுள்ளனவும், ஆயினும் இலைமறை காய் போல நம் கண்களுக்கு எளிதில் புலனாகாதனவுமான அழகிய உண்மைகள் மிகப் பல, இலக்கியம் அவற்றைக் கண்டுபிடித்து நமக்குப் புலப்படுத்து கின்றது. அது நம் மனத்தைப் பண்படுத்தித் தூய