பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இலக்கிய ஏந்தல்கள் சுதந்திரம் - சுதந்திரத்தைத் தேவியாக உருவகித்து மகிழ்ந்தவர் பாரதியார். எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு என்று பள்ளுப் பாடிக் களித்தார். ஆயின் நாடு விடுதலை பெற்று நாற்பது ஆண்டுகளாகியும் முழுமையான சுதந்திரம் ஏற்படவில்லை என்ற சமுதாய நோக்கு புதுக்கவிதை கட்கு உள்ளடக்கமாகின்றது. - - இரவிலே வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை -எ. அரங்கநாதன், விதி, ப. 118 என்ற கவிதை சுதந்திரத்தின் முழுப் சயனையும் அடைய வியலாத நிலையை விளக்குகின்றது. -- இன்றைய அரசியல் சாக்கடையாக மாறிவிட்டதை, வியாபாரம் செய்பவன் வியாபாரி விபச்சாரம் செய்பவள் விபச்சாரி இரண்டையும் செய்பவன் அரசியல்வாதி - -முருகன்; கதம்பம், ப. 42 என்ற புதுக்கவிதை படம் பிடிக்கின்றது. அரசியல்வாதி களின் போலி நிலையைக் காட்டுகின்றது. - வறுமை வறுமையைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய இலக்கியங்கள் வரை குறிப்பிடுகின்றன. வான் புகழ் வள்ளுவர்,