பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி.ப. இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது -திருக்குறள் : 1.0.41 என்று வறுமையின் கொடுமையை எடுத்துக்காட்டு ன்ெறார். புதுக்கவிஞர்களின் சிந்தனையோட்டமும் இதன் பால் செல்லுகின்றது. இதனை நிலைபேறு அடையச் செய்தவர்கள் அரசியல்வாதிகளே என்று அனைவரும் ஒருமித்த குரலோடு பேசுகின்றனர். - காங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம் ஆடை வாங்குவதற்காக -நா. காமராசன், கறுப்பு மலர்கள், ப. 78 என்ற புதுக்கவிதை பரத்தையரின் அவல, வறுமை நிலையினை விளக்குகின்றது. இவ்வாறு சமூகப் பிரச்சனை களை விளக்குமுகமாகப் பல புதுக்கவிதைகள் தோன்றி யுளளன. ஒருதலைக் காதல் காதல் விகாரங்களையும், ஆபாச உணர்ச்சிகளையும் சில புதுக்கவிதைகள் கூறுகின்றன. கறுப்பு வளையல் கையுடன் ஒருத்தி குனிந்து வளைந்து பெருக்கிப் போனாற் வாசல் சுத்தமாச்சு மனம் குப்பையாச்சி -கல்யாண்ஜி, விதி, ப. 15 என்ற கவிதையில் காதலின் வக்கிரத்தை இதில் காணலாம். காதலை மன நோயாகக் கொண்ட ஒர் ஆண் வக்கிரம் இங்குக் காட்டப் பெறுகின்றது. இது உளவியல் தாக்கத் இ.ஏ.-4