பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

à.tarr. 61 வில் பேரிடம் அளிப்பதுபோல அறிவு அடிப்படையிலான சிந்தனைகளுக்கு அளிப்பதில்லை. தாயை இருட்டில் வைத்துவிட்டு அவள் காலில் விழுந்து வணங்குவதில் என்ன பயன்? அவளை ஒரு மனிதப் பிறவியாகக் கருதி அவளுக்குரியன செய்யவேண்டும். மனைவியாக ஒரு வீட்டில் குடியேறும் பெண்ணிற்கு ஏற்படும் தான் புறக்கணிக்கப்படுவதாகக் கருதும் உணர்ச்சிநிலை பக்குவ மாகக் கையாளப்படவேண்டும். வயது பற்றிய உணர்வு ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் உடலளவில் தாய்மை அடைகின்றனரே தவிர மனநிலையில் சமூக உணர்வு நிலையில் தாய்மை அடைவதில்லை. ஒரு பெண் மணப் பெண்ணாகக் கருதப்படுவதற்கு அவள் உடல் வளர்ச்சியே கருத்தில் கொள்ளப்படுகிறதே தவிர மனவளர்ச்சி: மனப்பக்குவிம் கொள்ளப்படுவதில்லை. பருவம் அடைதல் வேறு, மனப்பக்குவம் அடைதல் வேறு என்பதுணர வேண்டும். ஆகவே திருமண வயது பதினாறிலிருந்து இருபதாகவோ இருபத்தைந்தாகவோ தள்ளிவைக்கப்பெற வேண்டும். நம் இலக்கியப் பண்புகள் திருமணப் பருவமாக இருபதுக்கு மேலான வயதையே காட்டவேண்டும். பெண்மையின் பெருமை பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா என்றும், வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலென அறிவோம் என்றெல்லாம் பாடிப் பரவித் தாய்மை என்பதைப் பெண்ணின் உயர்ந்த நிலையாகக் காட்டினர். இருபதாம் நூற்றாண்டின் எழுத்தாளர்கள் .ெ ப ண் சமூகத்தில் போராடிச் சீர்குலைத்து போவதைக் காட்டி நம் இரக்கத்தைத்