பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சி.பா. = . 61 பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்-பரி பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம் என்று இறைவன் ஒருவனுக்கே تايي-LLسات ஆன்ம நிலையினை எடுத்து மொழிகின்றார். மேலும் சுதந்திரப் பயிரை வாடிவிடாமல் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைத் தமக்கே உரிய அரிய கவிதைப் பாங்கில் அவர் அறிவுறுத்துவதன் அருமையைப் பின்வரும் வரிகள் கொண்டு உணரலாம்: தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா! இப்பயிரைக் கண்ணிராற் காத்தோம் கருகத் திருவுளமோ?... ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ? பாரத நாட்டினைப் பாடும் பொழுது அவர் உள்ளத்தில் தோன்றும் பெருமித மிடுக்கினைப் பாருங்கள். அவர் தாயும் தந்தையும் மகிழ்ந்து குலாவி வாழ்ந்தது இந்த நாடாம். அவருக்கும் முன்னோர்கள் பலர் வாழ்ந்து முடிந்ததும் இந்த நாடுதானாம். எங்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து - முடிந்ததும் இக்காடே என்று கூறி,