பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M, turr. 75 - வருகின்ற வரிகள் பாரத விடு தலையை மனத்தில் கொண்டு பாடியவையாகும். - கடவுள் நெறி ஞாலம் முழுவதையும் பராசக்தியின் தோற்றமாகக் கண்ட இவர், அன்னை வடிவமடா! இவள் ஆதிபராசக்தி தேவியடா-இவள் இன்னருள் வேண்டுமா-பின்னர் யாவு முலகில் வசப்பட்டுப் போமடா என்கிறார் பாரதியார். "ஆயிரந் தெய்வங்கள் இல்லை; அறிவே தெய்வம் என்று பல்லாயிர வேதங்கள் முழங்கு கின்றன" என்கிறார். காக்கைச் சிறகின் கருமையிலும், பார்க்கும் மரங்களின் பசுமையிலும், கேட்கும் ஒலியிலும் கண்ணன் பரமாத்மாவின் நிறமும் வடிவும் கீதமும் விளங்குவதாகக் குறிப்பிடுகின்றார். ஏசுபெருமானையும் அல்லாவையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். குயில் பாட்டு பாரதியாரின் கற்பனை வளத்தையும், உணர்ச்சி உந்தல்களையும் குயில் பாட்டில் கண்டு மகிழலாம். காதலை வேண்டிக் கரைகின்றேன் இல்லையெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன் என் ற குயிலின் சோகக் குரல் நம் காதுகளில் விழுந்து கொண்டேயிருக்கின்றது. வேதாந்தக் கருத்து இணையும் கவிதை குயில் பாட்டாகும், -