உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இலக்கிய ஏந்தல்கள் பாரதியின் விருப்பம் - "காணி நிலம் வேண்டும் பராசக்தி-காணி நிலம் வேண்டும்' என்ற பாடல்கள் பாரதி தன் மன விருப்பத்தைப் புலப் படுத்தியுள்ளார். காணி நிலத்திடை ஒரு மாளிகையும், மாளிகையைச் சுற்றித் தென்னை மரங்களும், தென்னங் கீற்றை யூடுருவி நிலவொளியும், காது குளிரச் செய்யும் குயிலோசையும், சித்தம் மகிழச் செய்யும் இளந்தென்ற லும், பாடிக் கலந்து மகிழ ஒரு பத்திணிப் பெண்ணும், இவ்வினைத்தும் எய்திடவும், எய்தியது நீங்காமல் நிலைத்திடவும், காட்டு வெளியினிலே அன்னை பராசக்தி கட்டுக் காவலும் வேண்டுமென்று பரவுகின்றார்.