பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இலக்கிய ஏந் தல்கள் என்பர். நம் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் நம் முன்னோர்களின் வாழ்க்கையினையும் பண்புகளையும் சமய சமூக அரசியல் நிலைமைகளையும் பளிங்கு போலக் காட்டுகின்றன காதலும் வீரமும் கொடையும் பண்டைத் தமிழரின் தனிச் சிறப்புகள். அகநானூறு போன்ற அகத்துறை நூல்களும், புறநானூறு போன்ற புறத்துறை நூல்களும் அச்சிறப்புகளை நன்கு வெளிப்படுத்துகின்றன. பின்னர் அறவுணர்ச்சியும் ФР i Dlij உணர்ச்சியும் மேலோங்கியபோது, திருக்குறள், நாலடியார் போன்ற அறநூல்களும், உறுதிப் பொருள்கள் நான்கினையும் கதை யின் மூலம் எடுத்துரைத்த பெரும், சிறு காப்பியங்களும் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் முதலான பக்தி நூல்களும் வெளிவந்தன. இடைக்காலத்தில் தோன்றிய கம்பராமாயணம் ஒப்புயர்வற்று விளங்கியது. பின்னர் வாழ்க்கையில் ஒருவகைத் தேக்கம் ஏற்படவே, படைப்பாற்றல் குன்றித் தல புராணங்களும் ஏனைய புராணங்களும் புற்றிசல் போல் கிளம்பின. இறுதியில் செல்வர்களை மகிழ்வு செய்வதற்காகச் சிறுபிராந்தங்களும், பாமர மக்களை மகிழ்வுறுத்த பள்ளு, குறவஞ்சி நூல்களும் வெளிவந்தன. பிறகு, ஆங்கிலேயர் தொடர்பினாலும், மேலைநாட்டிலக்கியங்களின் .ெ ச ல் வா க் கி னா லு ம் வாழ்க்கையின் பல துறைகளிலும் கிளர்ச்சியும் கொந்தளிப்பும் ஏற்பட்டன. பாரதியார் தோன்றிப் புரட்சி செய்தார். பெண்ணடிமை தீரப் பெருந்தொண்டாற்றிய பெருந்தகை அவர் அன்றோ! தமிழ் இலக்கியம் இன்று பாரதியார், அவர் வழிவந்த பாரதிதாசன் முதலானோ ரைப் பின்பற்றிப் பல துறைகளிலும் முன்னேறி வருகின்றது. இன்றைய இலக்கியம் புது உலகிற்கும். புது வாழ்விற்கும் வழிகாட்டியாய் நிற்கின்றது. அது இன்று எளிய மக்களின் வாழ்க்கையையும் படம் பிடித்துக் காட்டு