பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் குயில் கூவி மறைந்தது தண்டமிழ்க் கவிதைச் சோலையில் இன்னிசைத்தீம் பண்ணிசைத்துக் கொண்டிருந்த புதுவைக் குயில் பறந்து மறைந்துவிட்டது. தமிழ்க் கவிதை வானத்தில் இருள் சூழ்ந்துவிட்டது. வானத்திலே வட்டமிட்டுவந்த வெள்ளி நிலா இன்று இல்லை. கீதமிசைத்த கோலக் குயில் கூவி மறைந்துவிட்டது. எல்லையில்லாப் பெருவானத்தில் எங்கோ பறந்து சென்று மறைந்துவிட்டது. தமிழ்த்தாய் ஒர் அருமைக் கவிஞனை இழந்து தவிக்கிறாள். இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெருங் கவிஞர்களாகிய பாரதியும் பாரதிதாசனும் இன்று நம்மிடமிருந்து விடை பெற்றுச் சென்றுவிட்டார்கள். அவர்கள் விட்டுச் சென்ற கவிதைச் செல்வங்களே இனி நமக்கு உற்ற துணை. கி.பி. 1891ஆம் ஆண்டு புதுவையில் பிறந்து எழுபத்து மூன்று ஆண்டுகள் தமிழ் அன்னைக்குப் புத்தம் புது மணி யாரங்கள் பூட்டிக் களித்த புரட்சிக் கவிஞர் மறைந்து விட்டார். இயற்கையைப் பற்றி இனிமை ததும்பப் பாடிய கவிஞர் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். பதினெட்டு வயதிலேயே தமிழ்ப்பணி ெ தாடங்கிய தண்ட மிழ்க் கவிஞர் இன்று விண்ணோர் உலகு சென்றுவிட்டார். நான்கைந்து ஆண்டுகளாகக் கவிஞர் அவர்களோடு பழகும் நற்பேறு எனக்கு இருந்துவந்தது. அன்போடு அவர் அழைத்து இருக்கை தந்து விருந்தோம்பும் அந்தப் பண்பான காட்சி என் நெஞ்சில் அப்படியே பசுமையாக