பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 4 இலக்கிய ஏந்தல்கள் ஆம்! அஃது உண்மை. சுருங்கக் கூறின் காலம் கடந்தும் வாழப்போகும் கவிஞர் நம் கவியரசர் பாரதிதாசன் அவர்கள். புதுவைக் கவிஞர்-புதுமைக்-கவிஞர் புரட்சிக் கவிஞர் தம் எழுதுகோல் பல துறைகளிலும் பணியாற்றியது. "அவர் தொடாதது ஒன்றுமில்லை; தொட்டதை அழகு படுத்தாமல் விட்டதில்லை என்று டாக்டர் ஜான்சனைக் கோல்ட்ஸ்மித் கூறியதைப் போலப் பாரதிதாசனின் எழுதுகோல் தொடாத துறையே இல்லை. தொட்ட துறைகள் துலங்காமற் போனதில்லை. தமிழர்கள் வாழும் வரையில் அவர் வாழ்வார். தமிழ் உள்ளவரை அவர் கவிதைகள் வாழும். இறந்தும் இறவாக் கவிஞர் அவர். அவர் திருப்பெயர் வாழ்க. இனி, அவர்தம் கவிதைகள் சிலவற்றை நாம் நினைவு கொள்வோம். அவர் கவிதைகளை உள்ளவாறு அனுபவிப் பதே அவர் ஆன்மா அமைதியடைய நாம் செய்யும் பணி. முதற்கண் அவர் தம் இயற்கையின் எழில்பற்றிய பாடல்களைக் காண்போம். இயற்கை பாரதிதாசன் என்றவுடனே அவர் இயற்கையின் எழிலையும் இனிமையையும் புகழ்ந்து பாடிய கவிதைகள் நம் முன்னே நிற்கின்றன. அவர் கவிதை நூலாம் அழகின் சிரிப்பு உலக மொழிகள் அனைத்திலும் உடனடியாக மொழிபெயர்க்கப்பட வேண்டிய கீர்த்தியும் தகுதியும் வாய்ந்தது. "எங்கெல்லாம் அழகு கொலு வீற்றிருக் கின்றதோ அங்கெல்லாம் கோலக் குமரன்-தமிழ்க் கடவுள்