பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ø.torr, 95 மனித வாழ்விற்காகும் தூய காற்று நம் சுற்றப்புறத் தூய்மையாலேயே பெறப்படுவது. வீட்டுக்கு ஒரு மரம் நடுவோம் என்ப து அரசின் அறிவிப்பாக இருக்கி நிறது, தென்னை பயிரிடுங்கள் என்றும் தேக்கு வளர்த்திடுங்கள் என்றும் வேளாண்துறை பரிந்துரைக்கின்றது. காற்றினை அசைத்து முகில்களை வருடி மழையை உண்டாக்கும் ஆற்றலுடைய காடுகளை நாம் அழித் துக்கொண்டு வருகிறோம். மரங்களை வெட்டுவதால் உதகை போன்ற மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுகிறது. சாம்பற் சத்து, மணிச்சத்து, தழைச்சத்து என்பனவற்றுக்கெல்லாம். மூலமாக விளங்கும் தாவரச் செல்வத்தை நாம் இழந்து வருகின்றோம். * , செருந்தி ஆச்சா, இலங்தை தேக்கு ஈந்து கொன்றை o - யெல்லாம் பெருங்காட்டின் கூரை அந்தப் பெருங்கூரை மேலே நீண்ட ஒருமூங்கில் இருகுரங்கு கண்டேன் பொன்னூசல் ஆடல்! குருந்தடையாளம் கண்டேன் கோணல்மா மரமும் கண்டேன்! எத்தனை மரங்களின் பெயர்கள் ஒரு சிறிய பாட்டில் அடுக்கப்பெறுகின்றன. எதிர்காலத் தமிழ்ச் சமுதாயம் இவற்றில் பலபெயர்களுக்குரிய மரங்களை அடையாளம் காணப்போவதில்லை. தொட்டிகளில் வேர்விடாமல் குரோட்டன்ஸ் வளர்த்தல், குறுமரங்களாகவும் சிறுசெடி களாகவும் குறுக்கப்பட்டுப் பயன்பெறும் Bonsay தாவரங் களைப் பெருக்கல், வரவேற்பறைகளில் பிளாஸ்டிக் தென்னை மரங்களை அழகிற்கென அமைத்தல் ஆகியன சமூகப் பண்புகளாக மாறிவருகையில் சுற்றுச்சூழலைத் தூய்மையாக்கி நல்லகாற்றை வழங்கும் மரம் பயிரிடும் மனநிலை எப்படி உருவாகும். -