பக்கம்:இலக்கிய தீபம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

102 இலக்கிய தீபம் எனவே, நாம், ஆராயும் நூல் 12-வது நூற்றாண்டிற்கும் முன்னரே தொகுக்கப் பெற்றதாம். இனி, வீரசோழிய வுரையிலே 'அளவாற் றொக்கது குறுந்தொகை (அலங். 36, உரை) என்று கூறப்பட்டுள்ளது. இவ்வுரையும் வீரசோழியம் என்னும் இலக்கணமும் வீர சோழனென்னும் வீரராசேந்திரன் காலத்து எழுதப்பட் டனவாம். இவ்வரசன் கி. பி. 1062-ல் பட்ட மெய்தினான். எனவே இக்காலத்திற்கு முன்னரே குறுந்தொகை தொகுக் கப் பெற்றதென்று துணிந்த மேலை முடிபு பிறிதொரு வகையாலும் உறுதியடைகின்றது. என்க'. இனி, களவியலுரைகண்ட வரலாறு இன்னும் உறுதி யாகக் குறுந்தொகை தொகுக்கப்பட்ட காலத்தை அறுதி யிடுதற்கு உதவுகின்றது. 'உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திர சன்மனாவான் செய்தது இந்நூற்கு உரையென் பாரும் உளர்; அவர் செய்திலர், மெய்யுரை கேட்டார் இது அகப்பொரு ளுரைப்பகுதி. இவ்வாக்கியத் தில் நமது கவனம் இப்பொழுது செல்ல வேண்டும். இவ் வாக்கியமே மிக முக்கியமானது. இதன்கண் வரும் உருத் திரசன்மன் அகநானூறு தொகுத்தவனென்பது அந்நூலின் இறுதிக்குறிப்பாற் புலனாம். சங்கப்புலவர்களின் இறுதிக் காலம் கி.பி.3-ம் நூற்றாண்டின் இறுதியென்பது முன்பு தெளிந்தோம். இவர்களது செய்யுட்களைத் தொகுக்கும் கருத்து எழுவதற்கும் செயலாக முற்றுதற்கும் ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் சென்றிருக்கலாம். எனவே அகநானூறு தொகுக்கப்பட்ட காலம் 5-ம் நூற்றாண்டின் முற்பகுதி யென்பது ஒருவகையாற் புலனாகின்றது. குறுந்தொகை நூலினைத் தொகுத்தவன் பூரிக்கோவாதலா லும் இப்பூரிக்கோ என்பான் உப்பூரிகுடிகிழானாக இருத்தல் கூடுமாதலாலும், இத்தொகை நூல் உருத்திரசன்மனது தந்தையால் நான்காம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/111&oldid=1481711" இலிருந்து மீள்விக்கப்பட்டது