உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8. குறுந்தொகையில் ஒரு சரித்திரக் குறிப்பு பாடலிபுத்திரம் I என்னும் நகரம் சந்திரகுப்தர் அசோகர் முதலிய சக்கரவர்த்திகளுடைய தலைநகராய் விளங்கியது என்பதும், கி.பி. 5-ம் நூற்றாண்டிற்குப் பின் அப்பெரு நகரம் அழிந்தொழிந்தது என்பதும் இந்திய சரித்திரத்தால் நன்கு தெளியப்பட்டனவே. இவ் இருபதாம் நூற்றாண்டில் அந்நகரம் இருந்த இடந்தானும் அறிதற்கரி தாயிற்று. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் லெப்டினன்ட் கர்னல் எல்.ஏ.வாட்டல் (Waddel) என்னும் அறிஞர் இப் பொழுது 'பாட்னா' என்று வழங்கும் பிரதேசத்தில் தோண்டிப் பரிசோதனை செய்து, பாடலிபுத்திரம் அமைந் திருந்த இடத்தைக் கண்டுபிடித்தனர். தாம் செய்த ஆராய்ச் சியின் வரலாற்றினையும் முடிவினையும் 1892-ம் வருடத்தில் வெளியிட்டனர்.! அவருக்குப் பின்னரும் பாடலிபுத்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் நிகழ்ந்து கொண்டே வந்தன. அவற்றின் முடிவைக் குறித்து வி.எ.ஸ்.மித் தமது இந்திய புராதன சரித்திரத்தில் பின் வருமாறு கூறுகிறார்: நிருமிக்கப்பெற்றுப் கி.மு. 5-ம் நூற்றாண்டில் பேரரசர்களது தலைநகராய் விளங்கிய பாடலிபுத்திரமானது சோணை நதியின் வடகரையிலே, கங்கையினின்றும் சில மைல் தூரத்திலே, அவ்விரு நதிகளும் சங்கமித்தலாலுண் நீண்ட இடைப் பிரதேசத்தில் அமைந்திருந்தது. இந்தப் பிரதேசத்தில் இப்பொழுது சுதேசியர் வாழ்ந்து வரும் பாட்னா என்னும் பெரிய நகரமும், பங்கிப்பூர் டான 1. Discovery of the exact site of Asoka's classic capital of Pataliputram.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/117&oldid=1481717" இலிருந்து மீள்விக்கப்பட்டது