பக்கம்:இலக்கிய தீபம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மௌரியர் தென் - இந்தியப் படையெடுப்பு விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர் பொன்புனை திகிரி திரிதரக் குறைந்த அறையிறந் தகன்றன ராயினும் எனைய தூ உம் நீடலர் வாழி தோழி 137 என்பது இச்செய்யுட்பகுதி. ஸ்ரீ ராஜகோபாலையக்கார் பதிப்பில் இச்செய்யுளின் முதலடி இரண்டாஞ்சீர் ‘நெடு வரை' என்றுள்ளது பிழை. நெடுங்குடை என்று ஏட்டுப் பிரதிகளிற் காணுவதே உண்மைப்பாடம். மோரியர் என்ற பாடந்தான் என்னிடமுள்ள ஏட்டுப்பிரதியிலும் காணப்படு கிறது. ஆனால், இவ்வடியும் புறநானூற்றடியும் ஒத்திருத்தலை நோக்குமிடத்து 'ஓரியர்" என்பதுதான் பொருத்தமெனத் தோன்றுகிறது. மோரியர் என்பது சரித்திரப் பிரசித்தி பெற்ற பெயராதலின் ஓரியர் என்ற பாடபேதம் எழுதுவோ ரால் நேர்ந்த பிழையென்று கருதிப் பதிப்பாசிரியர் அதனைக் காட்டாமல் நீக்கினர் போலும். எங்ஙனமாயினும்,இச்செய் யுட்பளுதிக்குக் புறநாநூற்றுரைகாரர்கொண்ட பொருளே ஏற்புடையதாகும். உண்மைச்சரித்திர நிகழ்ச்சியைக் கூறுவ தாகக் கொள்வதற்கு இச் செய்யுளில் ஆதாரம் யாதும் இல்லை இனி, மோரியரை மாமூலனார் குறித்தனரென்று கொள்ளும் இரண்டுசெய்யுட்களுன் முதற்செய்யுளை (அகம். 251) எடுத்துக்கொள்வோம். ஆராயவேண்டும் பகுதியைக் கீழே தருகிறேன். நந்தன் வெறுக்கை யெய்தினும் மற்றவண் தங்கலர் வாழி தோழி வெல்கொடித் துனைகா லன்ன புனைதேர்க் கேரசர் தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/146&oldid=1500962" இலிருந்து மீள்விக்கப்பட்டது