பக்கம்:இலக்கிய தீபம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

138 இலக்கிய தீபம் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி யுருளிய குறைத்த இலங்குவெள் ளருவிய அறைவா யும்பர் ...

நிரம்பா நீளிடைப் போகி ... அரம்போ முவ்வளை நிலைநெகிழ்த் தோரே இதனை நோக்கியவளவில் ஒரு சரித்திரச்செய்தியை உணர்த்துவதாகத் தோன்றுகிறது என்பதனை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், சில ஐயப் பாடுகள் தோன்றுகின்றன. முதலாவது : கள்ளில் ஆத்திரையனாரும் பரங்கொற்ற னாரும் பாடிய செய்யுட்களில் ஜைன நூல்கள் சக்ர ரத்தம் என்று கூறும் ஆஞ்ஞாசக்ரம் குறிக்கப்பட்டுள்ளது. மாமூலனார் செய்யுளில் தேர்ச் சக்கரம் (புனைதேர் நேமி) குறிக்கப்பட்டிருக்கிறது. இருவகைச் சக்கரமும் பேரரசின் ஆணைப்பெருமையையே உணர்த்தினும், கதையென்ற அள வில் பிறழ்ச்சிகாணுதல் ஐயுறவை வலியுறுத்துகின்றது. இரண்டாவது : முற்கூறிய இடங்களில் ஓரியர் அல்லது மோரியர் குறிக்கப்பட்டுள்ளனர்; இங்கே 'வம்ப மோரியர்' குறிக்கப்பட்டுள்ளார்கள். வம்பு என்பது 'நிலை யின்மை' என்றேனும் 'புதுமை' என்றேனும் பொருள் கொள்ளத்தக்கது. 'வம்பப் பதுக்கை' என்ற புறநானூற் றுத் தொடருக்கு (3) உரைகாரர் 'புதிய' என்றே பொருள் எழுதினர். இப்பொருளை இங்குக் கொள்வதாயின், சந்திரகுப்த மௌரியர் முதலானோர் காலத்துக்குப் பிற் பட்டுப் புதிதாகத் தோன்றி, 'மௌரியர்' என்று தம்மைக் கூறிக்கொண்ட ஓர் வமிசத்தினர் என்று பொருளாய்விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/147&oldid=1500963" இலிருந்து மீள்விக்கப்பட்டது