பக்கம்:இலக்கிய தீபம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மௌரியர் தென்-இந்தியப் படையெடுப்பு 139 இவ்வகை வமிசத்தினர் முற்காலத்தே தென்னாட்டில் இருந்தனரெனஷ்! சரித்திரச் செய்தி அல்லவா? மூன்றாவது : நந்தனும் மௌரியரும் ஒருங்கே கூறப் படுகின்றனர். 'மோரியரது தேர்செல்லும்படி வெட்டப் பட்ட கணவாய்க்கு அப்பாலுள்ள பாழான பெருவழியிலே சென்ற தலைவர்க்கு அங்கே நந்தனது பெருநிதி கிடைப்ப தானாலும் அதன்பொருட்டுத் தங்கமாட்டார்' என்பது இச் செய்யுட்பகுதியின் பொருள். கர்தர்களை வழித்துப் பட்டமெய்தியவர்கள் மௌரியர்கள். அந் நந்தர்களுடைய நிதியம் பாடலியிலே கங்கை நீர்க்குக் கீழாகப் புதைத்து வைக்கப்பட்டுள்ளதென இம் மாமூலரே அகம் 265-ல் கூறி யுன்ளனர். இந்நிதியம் மௌரியர் தேர்செல்லும்படி யமைந்த மலைக்கு அப்பாற்பட்ட நீளிடையிலே கிடைக்க இயலு மென்னும்படி மாமூலர் பாடுவரா? இது ஊன்றி ஆராயத் தக்கது. கான்காவது : இவ்வடிகளுக்குப் பொதுவாகக் கூறப் படும் பொருள் மற்றைய இடங்களிலுள்ள வரலாறுகளோடு முரண்படுகிறது. மதுரைக்காஞ்சியில், பழையன் மோகூர் அவையகம் விளங்க நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன (508-9) எனவும், பெரும்பெயர் மாறன் தலைவ னாகக் கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர் (772-3) எனவும் வந்துள்ளனவற்றால் கோசர்கள் பழையன் மோகூ ருக்கு அமைச்சரசயும், சேனாவீரர்களாயும் அமைந்தவர்கள் என்பது அறியப்படும். இங்ஙனமிருப்ப, மௌரியரது முன் படையாய்க் கோசர் சென்று பகைமுனையைச் சிதைத்து 1.K. A.N . Sastri: The Cholas (1955), p.101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/148&oldid=1500964" இலிருந்து மீள்விக்கப்பட்டது