பக்கம்:இலக்கிய தீபம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காவிரிப்பூம் பட்டினம் 147 இது போன்றதொரு கதை காவிரியாற்றுக்கும் குற் பிக்கப்பட்டுள்ளது. கவேரர் என்ற ரிஷி பிரம தேவரைக் குறித்து அரிய தவஞ்செய்து, அவரருளால் விஷ்ணு மாயை யைத் தம் புத்திரியாக அடைந்து முக்தி பெற்றனர். பின்பு அக் கன்னி பிரமதேவர் கட்டளையின்படி நதி வடிவுகொண்டு சென்றமையால் அந்நதி கவேர கன்னியென்றும் காவேரி யென்றும் பெயர் பெற்றதாம். இது காவேரி மாஹாத்மியத் தின் 03-ம் அத்தியசயத்தால் தெரிகிறதென்பர்.மணிமேகலையும் கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய தவாக்களி மூதூர் எனக் காவிரிப்பூம் பட்டினத்தைக் குறித்துள்ளது. யென்ற பழம்பெயரை (9, 52-53) காவிரி சாபெரிஸ் என டாலமி என்ற யவன ஆசிரியர் குறித்தனர். இப்பெயர் காவேரி யெனப் பொது மக்கள் வழங்கியதைத் திரித்துக்கொண்டதே யாகும். இங்ஙனம் திரிந்த பெயரைச் சிலப்பதிகாரமும்

திங்கள் மாலை வெண்குடை யான்
சென்னி செங்கோ லதுஓச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி! காவேரி! கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவா தொழிதல் கயற்கண்ணாய்! மங்கை மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி! காவேரி!

என இனிதாக அமைத்துப் பாடிற்று. பின்னர் இப்பெய ரைத் தத்திதமாகக்கொண்டு, நதிகளை மகளிராகவும் தாயராக வும் கூறும் வழக்குப்பற்றிக் காவேரியை ஒரு புத்திரியாக்கி, அவளுக்குத் தந்தையாகக் கவேரர் என்ற மகரிஷியைப் பௌராணிகர்கள் சிருஷ்டித்து விட்டனர். காவிரி நதிக்குப் பொன்னி என்ற பெயரொன்றும் உளது. இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/156&oldid=1500978" இலிருந்து மீள்விக்கப்பட்டது