________________
3. திருமுருகாற்றுப்படை ஆற்றுப்படையென்ற நூல்வகையின் இலக்கணம் தொல்காப்பியத்தின் கண்ணேயே காணப்படுகின்றது. கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும் என்பது புறத்திணையியற்சூத்திரம் (36). அரசர்கள் முதலியோர் வாழ்ந்துவந்த சுகர்கட்குச் சென்று அவர்களுடைய புகழைப் பாடி மகிழ்வித்துப் புலவர்கள் ஆதரவு பெற்றுவந்த பண்டைக்காலத்தே இவ் வகைப் பிரபந்தங்கள் தோன்றுதல் இயல்பே. ஏனெனின், ஆற்றுப்படைகள் அரசர் முதலியோர் மாட்டுச்சென்று பாடிச் செல்வம்பெறுதலையே நூற்பொருளாகக் கொண் டுள்ளன. சங்ககாலத்தே பல ஆற்றுப்படைகள் தோன் றின. கூத்தராற்றுப்படை என்பது மலைபடுகடாத்திற்கு வழங்கிய ஒருபெயர். பாண ராற்றுப்படை வகையிற் சிறுபா ணாற்றுப்படை, பெரும்பா ணாற்றுப்படையென இரண்டு நூல்கள் உள்ளன. பொரு ராற்றுப்படை யென் பதம் பத்துப்பாட்டினுள் ஒன்றென்பது யாவரும் அறிக் ததே. விறலி யாற்றுப்படை யென்பது தனிநூலாகக் காணப்படவில்லை. ஆனால் இவ்வகைப்பாட்டு, புறநானூற் றிலும் பதிற்றுப்பத்திலும் வந்துள்ளது. சேயிழை பெறு குவை' (புறம் -105), 'மெல்லியல்விறலி' (புறம்.133) என்ற செய்யுட்களை உதாரணமாகக் காட்டல் தகும். கூத்தர், பாணர், பொருநர் இவர்களைப்பற்றிய ஆற்றுப்படைச் செய்யுட்களும் புறநானூற்றிற் காணப்படுகின்றன. இவை பெல்லாம் உகைவாழ்வுகளுகிய (சௌகெச்) செய்யுட்களாம்.