பக்கம்:இலக்கிய தீபம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமுருகாற்றுப்படை முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி-அரணியல் ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன் ஆனந்தஞ் சேர்க சுவாகா 21 என்ற மந்திரச் செய்யுளைச் சொல்லி இறந்துபடச்செய்த னர். இவ் வரலாற்றை இவை தெற்கண்வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் (ஒருவன்] சாவவும் பாடிய மந்திரம் அங்கதப் பாட்டாயின எனப் பேராசிரியர் செய்யுனிய துரையின் (சூ. 178) கூஅவதி லிருந்து ஊகிக்கலாம். இதனைச் சிறிது வேறுபடுத்தித் தமிழ் நாவலர் சரிதை உரைக்கின்றது. அதில் 'நக்கீரர் நாடத்துக் குயக்கொண்டானைச் சாகப்பாடிய அங்கத வெண்பா' எனத் தலைப்புத் தரப்பட்டுள்ளது. இது நுணுகி நோக்கத்தக்கது. நாடத்து' என்பது பொருள்படுமாறில்லை; அது கத்து' என்று இருத்தல்வேண்டும்போலும். இவ்வூகம் உண்மையொடு பட்டதாயின் 'நக்கீரர் நாடகம்' என்ற நூலொன்று வழங்கிய தென்றும், அதன்கண் இந்த வரலாறு கூறப்பட்டிருந்த தென்றும் நாம் கொள்ளலாம். ல் நாட 'நக்கீரர் நாடகம்' போன்றதொரு நூல் முற்காலத் தில் வழங்கிவந்த தென்பதற்கு வேறொருசான்றும் உள்ளது. யாப்பருங்கல விருத்தியுரையில் (பக்.133) ஊசி யறுகை யுறுமுத்தங் கோப்பனபோல் மாசி யுகுபனி நீர் வந்துறைப்ப-மூசு முலைக்கோடு புல்லுதற்கொன் றில்லாதேன் காண்மோ விறக்கோடு கொண்டெரிக்கின்றேன் இந் நக்கீரர் வாக்கினுள் கடையிரண்டடியும் மூன்றாமெழுத் தொன்றெதுகை வந்தவாறு காண்க எனக் காணப்படு கிறது. இச் செய்யுள் நக்கீரர் நாடகபாத்திரமாகவேனும் கதாபாத்திரமாகவேனும் வந்துள்ள ஒரு நூலிற் குரியதாதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/30&oldid=1481508" இலிருந்து மீள்விக்கப்பட்டது