பக்கம்:இலக்கிய தீபம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமுருகாற்றுப்படை 7 பெருந்தேவபாணி 8 கோபப்பிரசாதம் 23 9 காரெட்டு 10 போற்றித்திருக்கலிவெண்பா 11 கண்ணப்பதேவர் திருமறம் 12 களவியலுரை 13 அடிநூல் 14 நாலடி நானூறு மேற்குறித்த நூல்களுள் திருமுருகாற்றுப்படை முதல் கண்ணப்பதேவர் திருமறம் வரையுள்ள பத்து நூல்களும் 11-ம் திருமுறையில் அடங்கியுள்ளன. இந் நூல்களுள் திருமுருகாற்றுப்படை யொழிய ஏனைய வெல்லாம் சங்க காலத்திற்குப் பிற்பட்டன வென்பது தெளிவாம். பிரபந்த வகையை நோக்கினாலும், யாப்பு வகையைநோக்கினாலும், சொல்லின் உருவத்தை நோக்கினாலும், வடசொற்களின் அளவைநோக்கினாலும், கையாளப்பட்டுள்ள நடையை கோக்கினாலும், வரலாற்றுக் குறிப்பினை நோக்கினாலும் இவ் வுண்மை எளிதிற் புலப்படும். அந்தாதி, மும்மணிக்கோவை முதலியன மிகப் பிற்பட்ட பிரபந்த வகைகளாம். அந்தாதி முதலியவற்றைப் 'புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்துவரச் செய்வ'தாகிய விருந்து என்ப தன்பாற் படுப்பர் பேராசிரியர் (தொல்.செய். 239, உரை). கலித்துறை என்னும் பாவினம் திருவலஞ்சுழி மும்மணிக் கோவையிற் பயின்று வந்துள்ளது. இது மிகப் பிற்பட்ட வழக்கென்பது செய்யுள் வரலாறு அறிந்தாரனைவர்க்கும் உடன்பாடாம். கயிலைபாதி காளத்திபாதி அந்தாதியை மட்டும் எடுத்துக் கொண்டால், அதில், நான் (96), நாங்கள் (44),உன் (14,59) உனக்கு (77), இத்தனை (17),எத்தனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/32&oldid=1481510" இலிருந்து மீள்விக்கப்பட்டது