________________
26 இலக்கிய தீபம் என்பது போன்ற முத்தொள்ளாயீரச் செய்யுட்களின் முறையைப் பின்பற்றி அமைந்தது. செய்யுள்நடையை நோக்கினும் இப் பிரபந்தங்களின் நடை பிற்பட்ட காலத்த தாகும். கூறாய்நின் பொன்வாயாற் கோலச் சிறுகிளியே வேறாக வந்திருந்து மெல்லெனவே - நீல்தாவு மஞ்சடையும் நீள்குடுமி வாளருவிக் காளத்திச் செஞ்சடையெம் ஈசன் திறம் என்ற செய்யுள் மிக அழகாயுள்ளது. இதன்கண் ணுள்ள சொற்களித் பெரும்பானை (கானத்தி, ஈசன் என்பன தமிர} சங்கச்செய்யுட்களிற் காணக்கூடியனவே. எனினும் இதன் நடை வேறு ; சங்கச் செய்யுட்களின் நடைவேறு. தமிழ் நடையைக் கூர்ந்து ஆராய்வோர் இது பிற்பட்ட நடையென எளிதிற் கூறிவிடுவர். 'வேறாக வந்திருந்து' என்பது நடை யின் வேற்றுமையைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றது. மேற்காட்டிய காரணங்கள் 11-ம் திருமுறையிலுள்ள அந்தாதி முதலிய நூல்கள் சக்த காலத்திற்குப் பிற்பட் டனவென்பதையும், இவற்றை இயற்றிய நக்கீரதேவநாய னார் சங்கப் புலவராகிய நக்கீரர் அல்ல ரென்பதையும் தெளி விக்கப் போதியவை. கற்றறிவாளர் எளிதில் ஒப்புக்கொள் ளும் இம் முடிபினைக் குறித்து இன்னும் பல கூறுதல் வேண்டற்பாதைன்.து. இந் நக்கீரதேவராயனர் இயற்த யருளிய திருவெழு கூற்றிருக்கை யாப்பருங்கல விருத்தி யில் எடுத்தாளப்படுத்தலின் இவரது காலம் 11-ம் நூற்றாண் டிற்கு முற்பட்டது. கண்ணப்பர் சரித்திரத்திற்குக் கொடுக் கும் தலைமையால், இவரை மாணிக்கவாசக சுவாமிகள் காலமாகிய 9-ம் நூற்றண்டின் பின்பு வாழ்ந்தவராகக் கொள்ளுதல் தகும். சுவாமிகளும் 'கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை கண்டபின் ' (திருவாசக. 218) என்று கூறினர்.