பக்கம்:இலக்கிய தீபம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நெடுநல்வாடையும் நக்கீரரும் 51 தத்தம் இருக்தை ஏகுதலினாலே, தனிமையாயிருக்க நேர்ந்த தலைவிக்கு ஊற்றுக்கண் போலும் அவளது நெஞ்சிலே நினைவு ஒன்றன் பின்னொன்றாய் உதித்துக் காமம் கைம்மிக அளக் கொணாத்துயர அளக்கரில் விழுதலின், இக்காலம் நெடிதாய்த் தோன்றும். இது தலைவற்குநல்லதாதல் முன்விளக்கப்பட்டது. இவ்வண்ணமாகத் தலைவிக்கு நெடியதாயும், தலைவற்கு நல்லதாயும் உள்ளது வாடை. தலைவியை நோக்கும் போது அகத்திணையாகவும், தலைவனை நோக்கும்போது புறத்திணை யாகவும் இச் செய்யுள் அமைந்தது. நூலின் கண்ணும், வாடைக் காலத்தை வருணித்த பின்னர், தலைவிக்கு இரவு நெடியதாயவாறும், தலைவற்கு அக்காலம் நல்லதாயிருக்கு மாறும், தலைக்குறிப்புச் சொற்களை நிறுத்த முறையிலே கூறுதல் ஈண்டு நோக்கிக்கொள்க. மேற் கூறியவற்றால், இந்நூல்,அகமும் புறமும் விரவி வந்து இனிமைபெற்றுள்ளது என்பது தெளிவாம். அகம் என்றதில் ஒரு சிறு வேறுபாடு நோக்குதற்குரியது. சுட்டியொருவர் பெயர் கொள் ளாமையின் அகமாயிற்று (தொல்.அகத். 54). 'வேம்புதலை யாத்த நோன்காழெஃகம்' என அடையாளப்பூக் கூறின மையின் முழுதும் அகமாகாதாயிற்று. புறத்தோடும் இயை வதற்கு ஓர் இடைப்பட்ட தன்மையை இவ்வகம் கொண் டுள்ளது. ஒரு செய்யுளில், அகத்தை மட்டும் அல்லது புறத்தைமட்டுங் கூறினால், அஃது இத்துணைச் சிறப்புப் பெறாதென்பது சொல்லாமே அமையும். இப்போது கார்கால மாகையால் மேகம் பருவம் பொய் யாமல் புதுப் பெயலைப் பொழிந்து சிறிது இடை விட்டிருக் கின்றது. ஆறு முதலியன பெருக்கெடுத்து ஓடுகின்றன. இடையர்கள் பசுநிரைகளைத் தம் ஊர்க்கு அண்ணிய இடத் திலே மேய்த்துத் தம்மூரின் கண்ணேயே தங்கப்பெறாமை யாலே வருந்துகிறார்கள். அவர்கள் வெள்ளத்தை முனிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/60&oldid=1481538" இலிருந்து மீள்விக்கப்பட்டது