பக்கம்:இலக்கிய தீபம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

52 இலக்கிய தீபம் தூரவிருக்கும் மேட்டு நிலத்தின்கண்ணே தம் பசுநிரைகளை மேயவிட்டுப் போகட்டு, பற்பறை கொட்டக் குளிர் தாங்க மாட்டாது நடுங்குகிறார்கள்; பலரும் ஒருங்குகூடி நெருப் பெழுப்பித் தம் கையை நெருப்பிலே காய்த்தி அதிற்கொண்ட வெம்மையைக் கன்னத்தே உய்த்து உய்த்து ஒருவாறு குளிர் நீங்கி யிருக்கிறார்கள். விலங்குகள் இரை தேடற்றொழிலை மறந்து ஒடுங்கி யிருக்கின்றன. குரங்குகள் குளிர் மிகு தியால் நடுக்கமெய்தி உறுப்புக்களைச் சுரித்து வலித்துக் கொண்டிருக்கின்றன. காற்றின் கொடுமையால் பறவை கள் நிலத்தே வீழ்கின்றன.எனினும், கொக்குக் கூட்டமும் நாரைகளும் புதுப்புனல் வரும் வேகத்திற்கு ஆற்றாது விலகி, ஓடுதலில்லாத நீர் இருக்கும் இடங்களிற் பாயுங் கயல் முதலிய மீன்களின்மேற் கருத்து வைத்தனவாய்த் தத்தித் தத்தி இயன்றமட்டும் பறந்து வந்து இரை கொள்ளுகின் றன. பசுக்கள் தம் கன்றுகளின் மேல் இயற்கையிலேயே கொண்ட அன்பை மறந்து, அவைகளை உதறி உதைக்கின் றன. அமோகமாய் வருஷித்த மேகமும் இப்போது சிறு துவலையாகப் பிலிற்றுதற்குக் கற்றுக் கொண்டிருப்பது போலத் தோன்றிற்று. இவ்விதமான கிராமாந்தரங்களி லிருந்து நாம் நகர்ப்புறமணுகியதும், வயற்புறங்கள் தோறும் நீர் வளத்தால் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து கதிர்கள் முற்றி இறைஞ்சி நிற்பதையும், அடிபருத்த கமுகினது பாளைவிரிந்த தாறுகளில் பசிய காய்கள் நீர்திரண்டு புறம் பருத்து முற்றிக் குலை குலையாய்த் தொங்குவதையும், பூக்கள் நிரம்பிய குளிர்ச்சியான சோலைகளிற் கிளைகள் ஒன்றோ டொன்று உராய்ந்து தழுவி நிற்ப அவைகளிலிருந்து மழைத் துளிகள் இடையறாது வீழ்ந்துகொண்டிருப்பதையுங் காணப் பெறுகின்றோம். இத்தகைய குளிர்ந்த இரவில் அரசியார் கண்படுக்கும் பள்ளியறைக்கு நாம் சென்று அவ்விடத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/61&oldid=1481539" இலிருந்து மீள்விக்கப்பட்டது