பக்கம்:இலக்கிய தீபம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நெடுநல்வாடையும் 57 நக்கீரரும் கிடந்து தழும்பேறியிருந்த அவளது முன்கைகளிற் சங்கி னாற் செய்த வளைகள்தாம் இன்று காணப்படுகின்றன. அவ் அணங்கனாரது திவ்ய சரீரத்திலே மெல்லிய பட்டாடை யொன்று மின்றி மிகச் சாதாரணமான புடைவையொன்று தான் இருக்கின்றது. இவ்விதமாக, வண்ணங்களைக் கொண்டு எழுதப்பெறாது வடிவமட்டுங் காட்டப்பட்ட த்ெதிரம் போன்று அவள் படுக்கையிற் கிடந்தாள். இயற்கை வளப்பு வாய்ந்த சிவதியர்கள் அகியினது திரு வடியை வருடி சிற்கின்றர்கள். அவட்கு ஆற்றமை மிகுந்ததினாலே, 'நும் இன்னுயிர்த் தலைவர் விரைவில் வந்து நும்மை அடைகுவர்' எனப் பலவாறாக அவர்கள் இன் னுரை இயம்பியும், அவைகளைக் கருத்துட் கொள்ளாளாய் விகக் கலங்கி, கட்டிலில் இரையிலே மெழுகுசெய் படத்தில் சந்திரனோடு பிரிவின்றி அலைத்திருக்கும் உரோகிணியைப் பார்த்து நெட்டுயிர்க்கின்றாள். கடைக்கண்ணில் கண்ணீர் மல்கித் ததும்பி வழிகின்றது. அதனைத் தன் விரவிற் சேர்த்தித் துளி துளியாகத் தெளித்து, தனிமையாகப் போக்கருந் அயரப்புணரீபில் அழுத்திக்கிடக்கின்றாள். என்று: இத் துணைத் துன்பத்திற்குக் காரணமான அரசன்யாண்டுளன்? அரசன் இருக்குமிடத்தை அறிவுறுத்தற்குப் புலவர் நாட்டைக் கடந்து வெகுதூரத்திற்கு நம்மை இட்டுக் கொண்டு செல்கின்றார். அங்கே பகைப்புலத்திலே கார் காலத்துப் பாசறைக்கண்ணே இருக்கின்றான் அரசியின் காதற்கணவன். இந் நள்ளிரவில் இனிய கனாக்கண்டு கித்திரை செய்துகொண்டிருக்கின்றது! இல்லை' அவனும் தன் தலைவியை நினைத்துக் காமவசத்தனாய் உழல்கின்றானா? இன்யைய; இல்லை. அவ்வினிய செயலுக்கு இப்பொழுது இவன் உடன்படான் என்று அறிக. யானையொடு மலைந்து வென்றி கொண்ட வீரர்களது விழுப்புண்களைக் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/66&oldid=1481544" இலிருந்து மீள்விக்கப்பட்டது