பக்கம்:இலக்கிய தீபம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 இலக்கிய தீபம் அவற்றைப் பரிகரித்தற்குப் புறம்பே போதருகின்றான். வடதிசைக்கண்ணிருந்து வருகின்ற குளிர்ந்த காற்றிற்கு எதிர்ப்பட்ட விளக்கினது சுடர் தெற்காகச் சாய்ந்து எரி கின்றது. தனது தோளிலிருந்து நழுவி வீழ்ந்த துகிலை ஒரு கையாற் பக்கத்தே அணைத்துக்கொண்டு, தனது உறைகழித்த வாளினை ஏந்தி வருபவன் தோளிலே தன் மற்றொரு கையை அமைதியோடு சேர்த்தியுள்ளான். இங்ஙனம் நடக்கும்போது அவன் யுத்தத்திற்குச் சன்னத்தனாய் இருப்பதைத் தெரிவிப் பன போலச் சேணமிட்ட குதிரைகள், மழைத்துளியை உதறிப் போகட்டுக் கனைக்கின்றன. தனக்கு முன்னாகச் செல்கின்ற சேனாதிபதி புண்பட்ட வீரரை முறையே காட்ட, அவர்களுக்கு அகமலர்ச்சி யுண்டாகும் வண்ணம் சுமுகனாய் இன்சொற்சொல்லித் தன்னுயிரினும் இனியராகிய சிலரோடு பாசறைப் புறத்தே திரிதருகின்றான். இவ்வண்ணமா யுள்ளது தலைவி தலைவனது நிலைமை. இதனைக் கண்ணுற்றவர்களுள் யாவர் தாம் போர் நன்கு முடி வெய்தப்பெற்று அரசன் விரைந்து திரும்புதலை விரும்பாதவர்? செய்யுள் நலம் இதுவே செய்யுளிற் குறித்துள்ள பொருள். இனி, செய்யுளினது நலத்தைச் சிறிது நோக்குவோம். பாட்டிற் சொல்லக்கருதிய தலைமைப் பொருளை, பலவேறு பிரிவு படுத்துச் சிதைவுறுக்காமல், ஒருமைப் படுத்தி யாவரும் எளிதின் உணரக் கூடிய இயல்பும் இனிமையும் பெறும்படி அமைத்த ஆற்றலும், அப்பொருளைத் தோற்றுவாய் செய்து சிறிதும் இடர்ப்படாமல் செய்யுட் போக்கிலேயே வளர்த்து முதிர்ச்சியடைவித்த திறனும், செய்யுட் பொருள் நிகழ்தற்கு இடனாகிச் செய்யுட்குத் துணையாயமைந்த இயற்கையினது நலன்களை உண்மையின் வழாமல் மனங்களிப்ப வருணித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/67&oldid=1481545" இலிருந்து மீள்விக்கப்பட்டது