பக்கம்:இலக்கிய தீபம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 என் இலக்கிய தீபம் முடலை யாக்கை முழுவலி மாக்கள் வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து துவலைத் தண்டுளி பேணார் பகலிறந்து இருகோட் டறுவையர் வேண்டுவயிற் றிரிதர ற அடிகள் குறிப்பிடுகின்றன. இவ்வடிகள் விரைந்து இறுமாந்து செல்லும் ஈடையைச் செவ்விதில் புலப்படுத்து கின்றமை காண்க. நெடுநல் வாடையிற் சுவையுடைச் சொற்களை ஆசிரியச் பிரயோகித்திருக்கின்றர் என்பதை, அகலிரு விசும்பிற் றுவலை கற்ப கதிர்வணங்க பண்ணுமுறை நிறுப்ப சிலம்பி வானூல் வலத்தன தூங்க நன்னுதல் உலறிய சின்மெல் லோதி முகன் அமர்ந்து முதலிய உதாரணங்களால் அறிக. வடமொழிக்கணப்பும் கீற்றைக்காடுத்து நூல்களில் மிகுதியாகக் காணப்படும். சங்க நூல்களிலே, பொதுவாக நூற்றுக்கு ஐந்து விழுக்காட்டிற்குமேற் காணப்பெறுவ தில்லை. நெடுநல் வாடையில் சற்றேறக்குறைய 610 முழுப் பதங்கள் இருக்கின்றன. இவைகளின் சுமார் 50 வடமொழிச் சொற்களும் பிராகிருதச் சொற்களும் காணப்படுகின்றன. ஆகவே இங்கே நூற்றுக்கு எட்டு வீதந் தான் பிற மொழிச் சொற்கள் உள்ளன வென்பது போதரும். பிற்றைக்காலத்து நூல்களிலே, அழகு செய்வனவாக கருதப்படுகின்ற அலங்கார வகைகள் மிகுதியுங் காணப் படுகின்றன. அவைகள் உண்மையான செய்யுட்களை சுவைத் தறிந்த ஒருவனுக்கு மிகவும் அருவருப்பைத் தருகின்றன. உண்மையின் வழுவியும் சில விடங்களில் உண்மைக்கு முற்று மாறாகவும், பொருளினது தகுதியை நோக்காமலும், உலகின் கண்ணுள்ள பொய்களை யெல்லாந்திரட்டிக் கவிஞர்கள் அலங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/69&oldid=1481547" இலிருந்து மீள்விக்கப்பட்டது