பக்கம்:இலக்கிய தீபம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

86 இலக்கிய தீபம் கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக்குக' என்று பிறிதோரிடத்துங் கூறினர் (தொல். புறத். 26, பக். 321). இவ் இரண்டாவது இடம் பிறிதோர் அரிய செய்தியையும் நமக்குப் புலப்படுத்துகின்றது. பதிற்றுப்பத்து என்ற தொகை நூலில் முதற் பத்தும் இறுதிப் பத்தும் இப்பொழுது அகப்படவில்லை யென்பது யாவரும் அறிவர். அந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் முழுமையும் இங்கே தரப்பட் டுள்ளதெனக் கருத இடமுளது. அது 'எரியெள்ளுவன்ன' என்ற உதாரணச் செய்யுளாம். பேராசிரியர் 'பாட்டுக் தொகையும் அல்லாதன சில நாட்டிக்கொண்டு' என்பர் (தொல்.மரபி. 94, பக். 1355). பாட்டு என்றது பத்துப் பாட்டினை. நன்னூற்கு உரையெழுதிய மயிலைநாதர் என் னும் சைனமுனிவர் இத்தொகை நூல்கள் எட்டாவன என் பதை 'ஐம்பெருங்காப்பியம், எண்பெருந்தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் இவ் இலக்கியங்க ளுள்ளும் விரிந்த உரிச்சொற் பனுவல்களுள்ளும் உரைத்த வாறு அறிந்து வழங்குக' (பக். 265) என்ற உரை வாக் கியத்தால் நமக்கு அறிவுறுத்துகின்றார். இந்த எட்டு நூல் களும் இன்ன என்பதை, நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தா ரேத்துங் கலியே அகம்புறமென்று இத்திறத்த எட்டுத் தொகை என்ற பழைய செய்யுள் நமக்கு உணர்த்துகின்றது. எனவே தொகை நூல் எட்டனுள் இரண்டாவதாகக் கூறப்படுவது இக் குறுந்தொகை. தொகை நூல்களுள்ளே வேறொன்றற்கு மில்லாத பெருமை குறுந்தொகை பெற்றுள்ளது. இதன்கணுள்ள செய்யுளொன்று இறைவனாலே இயற்றப்பட்ட தென்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/95&oldid=1481695" இலிருந்து மீள்விக்கப்பட்டது