பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை பேராசிரியர் ஆ. சங்கர வள்ளி நாயகம் எம்.ஏ., பி.டி. தமிழ் விரிவுரையாளர், கோ. வெ. நா. கல்லூரி கோயில்பட்டி மொழியின் முதிர்ந்த பயன் இலக்கியம் எனலாம். உயர்ந்த கருத்துக்களைத் தன்னுள் கொண்டிருப்பதே இலக்கியம் எனப்படும். இலக்கியமே மக்கள் வாழ்வினைச் சிறப்பிக்கும், பண்படுத்தும்; இன்பமாக்கும்; உயர்நிலைக்குக் கொண்டு செல்லும். இலக்கியம் என்பது தூய தமிழ்ச் சொல். குறிக்கோளை இயம்புவது என்பதே அதன் பொருளாகும். இலக்கிய வரலாற்று அறிவு இன்று ஒவ்வொரு தமிழனுக்கும் இருத்தல் வேண்டும் என்ற உணர்வு முகிழ்த்து வருவது பாராட்டிற்குரியது. இவ்வுணர்வினை நிறைவு செய்யும் நிலையில் மலர்ந்ததே இலக்கிய மலர்கள்' எனும் இந்நூலாகும். இந்நூலினைப் படைத்திருக்கும் பேராசிரியர் திருமிகு அ. திருமலைமுத்துசுவாமி நாடறிந்த நற்றமிழ்ப் புலமையாளர் ஆவார்கள். சென்னை பல்கலைக் கழகம் நடத்தும் நூலகவியல் குறுகிய காலப் பயிற்சியில் எனக்கு வாய்த்த நல்லாசான் ஆவார்கள். தமிழ்மொழியில் முதுகலைப் பட்டத்துடன் ஆய்வுப் பட்டமும் நூலகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்ற நன்முயற்சியாளரும் ஆவார்கள். இரு துறைப் புலமையுடன் இலங்கும் இவர்கள் எழுதிய இந்நூல் கற்றோர்க்கு மட்டுமின்றி, மற்றோர்க்கும் பயன்படும் பாங்கினைப் பெற்றுள்ளது. இலக்கியச் செல்வர்க்குரிய கருத்துச்