பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xi முகப்படுத்துகிறார் அடுத்த கட்டுரையில். இந்தியாவும் விடு தலையும் என்ற நூலினை அடிப்படையாகக் கொண்டு தமிழ் முனிவர் திரு. வி. க. வின் உரைநடைத் திறனை ஆராய்ந்து விளக்குகிறது மூன்றாவது கட்டுரை. நான்காவது கட்டுரை காப்பியத் தமிழ் காப்பியம் என்ற இலக்கிய வடிவினைச் சுருக் கமாக விளக்கித் தமிழிலுள்ள பண்பைப் பெருங் காப்பியங் களைப் பற்றிய குறிப்புகளை ஆசிரியர் இதில் வழங்கி யுள்ளார். பாரி வள்ளல் பற்றியது ஜந்தாவது கட்டுரை. எட்டுத் தொகை பற்றிய அறிமுகமாக விரிகிறது ஆறாவது கட்டுரை. பட்டினப்பாலையை அறிமுகப்படுத்தும் ஏழாவது கட்டுரையுடன் நூல் முடிகிறது. பாலையில் நூல் முடிகிறது. நூலிலே வறட்சி இல்லை , தமிழின் ஈரப் பசுஞ்சொல் வளம் இருக்கிறது. ஆய்வு முறைக்கு மு. வ, திரு .வி. க. ஆகியோர் பற்றியக் கட்டுரைகள் நல்லணி நல்குவன. பாரி - மூவேந்தர் முரண்பற்றி ஆசிரியர் துணுக்கமாக ஆய்ந்துள்ளார். ஏனைய கட்டுரைகளெல்லாம் உரிய நூல்களைத் திட்டமுறப் பயில்வதற்குப் பாயிரமனைய அறிமுகமாக அமைந்துள்ளன. எளிய தடையில் பொலிவுற எழுதியுள்ள ஆசிரியர் திறம் பாராட்டத்தக்கது. தமிழ் இளங்கலை, நிறைகல் வகுப்பு களில் பயிலும் மாணாக்கர்க்கு ஓராற்றான் இக்கட்டுரைகள் பயன்படக் கூடும் எனக் கருதுகிறேன். கோவை, } 24-7-75. (ஒம்) ம. ச. பே.

               குருசாமி