பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

காவியங்களில் இருப்பதைப் போலவே இவற்றிலும் வருணனைகள் உண்டு.ஆனால், காவிய வருணனைகளில் உயர்வு நவிற்சி" இருக்கிறது; இவற்றில் தன்மை நவிற்சியைக் காண்கிறோம்.இவருடைய நாவலை முற்றும் படித்த பிறகு உண்டாகும் நிறைவில், இலக்கிய இன்பத்தில், சுவையில் நாம் அமிழ்ந்து போகிறோம்.எளிதில் அதனின்றும் மீள முடிவதில்லை. இது தானே இலக்கிய இன்பம்? இதனை இவருடைய நாவல்களில் முழுமையாகக் காண்கிறோம். "நல்ல நாவல் என்பது உரை நடையில் அமைந்த காப்பியம்' என்ற மேல் நாட்டு ஆசிரியர் - ஆனா லேக்டீஸியா பார்போல்டு(Anna Lactitia Barbould) அவர்களின் கூற்று டாக்டர் மு.வ. அவர்களின் நாவல்களைப் பொறுத்தவரையில் முற்றிலும் பொருந்தும்.

கதை கூறும் உத்தி

நாவலாசிரியர் தன் பாத்திரங்களின் குணாதிசயங்களையும் செயல்களையும் விளக்க இருபெரும் முறைகளைக் கையாள்வார். தன்மைக் கூற்றாகக் கதையைச்சொல்லுவது ஒருமுறை இதில் கதாபாத்திரங்கள் தம் அந்தரங்க உணர்வுகளையும் விருப்பங்களையும் தெளிவாக எடுத்துச் சொல்ல முடியும்: படர்க்கைக் கூற்றாகக் கதையைக் கூறுவது இரண்டாவது முறை. இதில் ஆசிரியர் படர்க்கையில் நின்று தன் பாத்திரங்களைச் செயல் செய்யவிடுத்து அச்செயல்களின் கருத்துக்களையும், அப்பாத்திரங்களின் உணர்ச்சி, துரண்டுதல்,எண்ணம் முதலியவற்றையும் தாமே எடுத்துக் கூறுவார். ஒவ்வொரு நாவலாசிரியரும் இவ்விரண்டு முறைகளில் ஒன்றைப் பெரும் பான்மையாகக் கையாள்வார். டாக்டர் மு.வ.தமது நாவல்களில் தன்மைக் கூற்றாகக் கதையைக் கூறும் பாணியினேயே பெரும்பான்மையாகக் கையாளுகிறார்.அவருடைய முதல் நாவலாகிய -செந்தாமரை”யில் கதாபாத்திரங்களாகிய திலகம், இளங்கோ,மருதப்பன், செந்தாமரை, திருநாதன் ஆகியோரின் வாயிலாகவே கதையைச் சொல்ல வைக்கிறார், அதே போன்று,அவருடைய நாவல்களுள் சிறந்ததெனக் ■