பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 76 களைத் தங்கள் செல்வாக்கால் தலை காட்ட விடாது செய்திருக் காலமென்றும் கருதுகின்றனர்.

முல்லைக்குத் தேர் ஈந்தது

   இனி பாரியின் வள்ளன்மையைக் குறித்து ஒரு சிறிது வரைவாம். பாரியின் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நிகழ்ச்சி அவன் முல்லைக் கொடிக்குத் தேர் நல்கியதாகும். பிறர் செய்யாத ஒன்றை அவன் செய்ததினால் அதனை யாவரும் மறக்காதிருக்கின்றனர். வேட்டையாடி பொற்றேர் இவர்ந்து வரும் வழியில் முல்லைக் கொடி ஒன்று படர்வதற்கு ஏற்றதொரு கொழுகொம்பு இல்லாது வெயிலாலும் காற்றாலும் துன்புறுவதைக் கண்டு இரங்கி, என் தேரை இம்முல்லைக் கொடி படர்வதற்கு ஆதரவாக விட்டுச் செல்வேன்' என்று அவன் கூறி முல்லைக் கொடிக்குப் பொற்றேர் கொடுத்தது புதுமையான தொன்றுதான்ஈடுபாடு வரம்பு கடந்து போகும் பொழுது இத்தகைய நிகழ்ச்சி ஏற்படுவது இயற்கைக்குப் பொருந்தியதே. இந்த உணர்வு மயமான வாழ்க்கையை உடையவர்கள் தான் பாரியின் இந்தச் செய்கையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளனர். அவர்கள் உணர்வின் எல்லையை நன்கு பதித்தனர். இந் நிகழ்ச்சியைக் கூறவந்த நத்தத்தனர்,
  "சிறுவி முல்லைக்குப் பெருந்தேர் 
   நல்கிய பறம்பிற் கோமான் பாரி"

என்று சிறு பாணுற்றுப்படையில் செவ்விய முறையில் சித்திரித்துக் காட்டுகின்றார். இதையே கபிலரும் விச்சிக்கோவிடம் பாரிமகளிர்க்காக மன்றாடும்பொழுது,

  "பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை

நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும் கறங்கு மனி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரிமகளிர்"