பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 79

      6. எட்டுத்தொகை

சங்க இலக்கியங்கள்

    கடைச் சங்க காலத்து நூல்களே சங்க இலக்கியங்களாகும். இவற்றைப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என இரண்டாகப் பிரிக்கலாம். :இத்தொகை நூல்கள் பல புலவர்களால் பாடப்பட்டனவாகும். இப்புலவர்கள் ஒரிடத்தில் வாழ்ந்தவல்லர்; ஓரினத்தையோ அன்றி ஒரு சமயத்தையோ சார்ந்தவரல்லர்; ஒரு காலத்தவருமல்லர். மேலும் சில புல வர்களுடைய பெயர்கள் அறிவதற்கில்லை. ஏறத்தாழ இரு பத்தைந்து ஆசிரியர்கள் புனை பெயருள்ளவர்கள். களவியல் உரைகாரர். இவர்களை நீக்கிச் சங்கப் புலவர்களைக் கணக்கிட்டு அவர்கள் நானுாற்று நாற்பத்தொன் பதின்மர் என்று கூறியுள்ளார். இவர்களுள் இருபத்தேழு புலவர் பெண்பாலராவர். ஒளவையார், வெள்ளி வீதியார், காக்கைப் பாடினி யார், நச்செள்ளையார், பாரி மகளிர் என்போர் பெண்பால்

புலவர்களில் குறிப்பிடத் தகுந்தோராவர். பழந்தமிழ்ப் பெருமக்கள் தங்கள் அக வாழ்க்கையையும், புற வாழ்க்கையையும் கூர்ந்துணர்ந்து உணர்வொழுகப் பாடிய பாடல்களின் தொகை நூல்களே அவர்தம் வழிவந்த மக்களால் பத்துப்பாட்டெனவும், எட்டுத் தொகையெனவும் கூறுபடத் தொகுக்கப்பட்டன. ஆய்ந்து நோக்குங்கால் ஊன்றிநோக்கி உணர்ந்து பாடும் புலவர் பெருமக்கள் அருகி, மக்கள் உணர்வுவற்றிய காலத்தில்தான் சிதறுண்ட பழந்தமிழ் நூல்களைத் திரட்டுதற்கான ஊக்கம் தோன்றியிருத்தல் வேண்டும் அயல்மொழி மன்னர் ஆட்சியில்தான் மக்கள் உணர்வு குறைந்து மந்தமான மனநிலை ஏற்பட்டிருத்தல் வேண்டும். களப்பிரர் என்ற ஒரு அயற்கூட்டத்தார் ஆட்சியில் இத்தகைய மந்தநிலை ஏற்பட்டிருத்தற்கு இடம் உண்டு என்று வரலாற்றறிஞர் ஊகிக்கின்றனர். எனவே அக்காலத்தில்தான் இயல்பாக உணர்வூட்டும் பாடல்கள் அருக, மக்கள்