பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



84

மறைவாக வளர்த்து வருவர். பின்னர் தவைன் பொருள் தேடுவதற்காகவும், கல்வியின் பொருட்டும் தலைவியினைப் பிரிந்து சில நாள் சென்ற பின்றை தலைவியை நோக்கி வருவான்; தோழி அல்லது பாங்கி, தலைவனைக் கண்டு விரை வில் தலைவியை வரைந்து கொள்க என வற்புறுத்துவாள். பின்னர் தலைவியின் பெற்ருேர் இசையின் அவர் முன்னர் திருமணம் நடக்கும். இல்லையேல் அடுப்பாரும், கொடுப் பாரும் இன்றித் தலைவனும் தலைவியும் வேற்றுார் புகுந்து வதுவை முடித்து வாழ்வர்.

வதுவை முடித்த பின்னர் நடத்துவது கற்பு வாழ்க்கையாகும். இவ்வாறு தலைவனும் தலைவியும் காதல் வயப்பட்டு வாழ்க்கை நடத்துங்காலை பொருள் இல்லாத வறுமை நிலை ஏற்படும்போல் தோன்றும். அதனே அறிந்த தலைவன் இல்லற வாழ்க்கை இனிது நடக்கும் பொருட்டுப் பொருள் தேடக் காலினும், கலத்தினும் வேற்று நாட்டிற்குப் பிரிந்து செல்ல எண்ணுவான். அவ்வாறு பிரியும்முன் இருவரும் கலந்து மிகவும் மகிழ்ந்திருப்பர்; அதற்குக் குறிஞ்சி என்று பெயர் ; பொருள்வயிற் பிரிதல் பாலை எனப்படும். பொருள் வயிற் பிரிந்த தலைவன் வருந்துணையும் தன் நிறை காத்து இல்லறம் இனிது நடாத்தல் முல்லே மணந்த கணவன் குறித்த காலத்தில் வாராது போகவே தலைவிக்கு ஆற்ருமை மிகும். அவ்வாறு ஆற்ருமை மிகுந்த பொழுது வளையும் கழலும்; குழலும் சரியும்; மேனிபசலையுறும். தலைவி பெரிதும் இரங்குவாள். இதற்கு நெய்தல் என்று பெயர் கூறுவர். குறித்த காலங் கழித்துப் பின் தலைவன் வருவான்; அவன் அவ்வாறு தாமதித்து வந்தமை குறித்துத் தலைவி ஊடல் கொள்வாள். அது மருதம் எனப்படும்.

மேற்கூறிய அகவொழுக்கத்தைச் சித்திரிக்கும் சிறந்த நூல்களே, அகநானுாறு, குறுந்தொகை, கலித்தொகை போன்ற சங்க நூல்கள் ஆகும்.