பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் - 103 வகை இலக்கியங்களைப் படைத்த பெருங்கவிஞர்கள். குழந்தைகள், சிறுவர்கள் இவர்கள்பாலும் கருணை கொண்டு அவர்கள் முன்னேற்றத்திற்காகவும் பாடல் கள் படைத்துப் பெரும் புகழ் ஈட்டியவர்கள். இவர்கள் தவிர, குழந்தை இலக்கியப் படைப்பிற் காகவே சில கவிஞர்கள் தோன்றியுள்ள்னர். இன்று. குழந்தை இலக்கியவானில் ஞானதுரியன் போல் தோன்றி, மறைந்தும் மங்காத புகழ்ச் சோதியாய் சுடர் விட்டுத் திகழ்பவர் அழ.வள்ளியப்பா ஆவார், இவர் குழந்தைகட்கு விட்டுச் சென்ற சொத்து "மலரும் உள்ளம் என்ற கவிதைச் சுரங்கம். இது பல பதிப்பு களைக் கண்ட கவிதைக் களஞ்சியம். இதில் வரும் பாடல்கள் ஐந்து பகுதிகளையும், "வேடிக்கைப் பாடல்கள்’ என்ற தலைப்பில் ஒரு தனிப்பகுதியையும் கொண்டவை. - எடுத்துக் காட்டுகள் சில: கப்பல் நல்ல கப்பலாம் கடலில் செல்லும் கப்பலாம் கலங்கரை விளக்கினால் கரையைக் கண்டு சேருமாம்." என்பது கப்பல்பற்றிய கவிதை. கன்றே கன்றே ஒடி வா: காளைக் கன்றே ஒடி வா இன்றே கூடி இருவரும் இன்பமாகப் பேசலாம் 7. இது பாரி நிலைய வெளியீடு. முதல் பதிப்பு. (மார்ச்சு - 1954). 8. மலரும் உள்ளம் - முதற்பகுதி பக்-130