பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#34 இலக்கியவகையின் வளர்ச்சியும் இவன் கலப்படம் செய்த கல்லாலும் மண்ணாலுமே இவனது கல்லறை எழுப்பப் பெற்றது. உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வோர் மீது எழுந்த கவிதை இது. மருந்துகளிலும் கலப்படம் செய்யும் மறலித் தூதுவர்களும் உள்ளனர். (3) விலைவாசி என்ற தலைப்பில் ஒரு கவிதை. விற்போரின் முதலிரவு வாங்குவேரின் வயிற்றெரிச்சல் ஆள்வோரின் அனாதைகள் எதிர்த்தரப்பின் ஏகவாரிசுகள். திரும்பத் திரும்ப இக்கவிதையைப் படிக்கும்போது சினம் சீறி எழுகின்றது. என்ன செய்வது? தீராத நோயாகி விட்டதே! (4) ஏளனத்துடன் வெளிப்படும் கவிதை: கால்பந்து விளையாடிக் களைத்துப் போனபின் விளையாட்டு வீரர்கள் ஒருவரை யொருவர் உதைத்துக் கொண்டனர் பார்வை யாளரும் தமக்குள்