பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10

லாயிரம் ஆண்டுகள் கழித்தும், பல்வேறு மனப் பண்பு கொண்ட பல கோடி மக்களிடையேயும் வாழ்கின்றன. அதைப் போலவே, பல்வேறு நாடுகளில், பல்வேறு இனத்தாராலும் போற்றப்படும் இலக்கியங்களும் உள. காரணம் பல்வேறு காலங்களில், பல்வேறு நாடுகளில் வாழ்ந்த, வாழ்கின்ற மக்களின் பல்வேறு ஆசாபாசங்களையும் நிறைவேற்றித் தரும் அச்சிறப்பியல்பு அவற்றின் பால் இருப்பதேயாகும்.

ஆகவே, பாடிய புலவன் மறையினும், பாடத் துணைபுரிந்த புரலவன் மறையினும், தான் மட்டும் மறையாது நின்று மாண்புறும் வண்ணம், என்றும் அழியா, மக்களின் ஆசாபாசங்களை அடிப்படையாகக் கொண்டு எழுவனவே உயர்ந்த உண்மையான இலக்கியமாம் எனக் கொள்க.