பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18

 எவ்வாறு நாகரிகத்தைக் கண்டார்களோ, அவ்வாறே மொழியிலும் நாகரிகம் வேண்டும் என விரும்பினார்கள்: இன்னும் விரும்புகிறார்கள். அதன் விளைவால், அன்று நாகரிகம் அற்றுக் கேட்பதற்கு இன்னாவாய் ஒலித்த மொழி, இன்று காதுக்கினிய, கவின் மிக்கதாய் மாறிவிட்டது.

இந்த மாறுதல், ஒரே நாளில், ஒரே திங்களில். ஒரே ஆண்டில் உண்டானதன்று மரங்களின் இலைகளையும், மரப்பட்டைகளையும், மாவினத்தின் தோல்களையும் ஆடையாகக்கொண்ட மக்கள். அவ்வாடைகளை அறவே மறந்து, இன்றுள்ள பளபளக்கும் பொன்னிறப் பல்வேறு ஆடைகளை ஒரேநாளில் அறிந்து கொண்டவரல்லர். அன்று தாம் மேற்கொண்ட அவ்வாடை வகைகள் கிடைத்தற்கு அரியவாகிய காலத்தில் அவற்றிற்கு ஈடாக, வேறு பொருள்களைத் தேடத் துணிந்து, பகுத்தியையும், பட்டையும், பல்வேறு மயிரையும் கண்டு, ஆடை ஆக்குதற்கு அவை ஆகும் என்பதறிந்து, அவற்றைக் கொண்டு ஆடை செய்யும் அறிவினைத் தெரிந்து. அதன் பின்னர், ஆக்கிய ஆடைகள்,வண்ணமும் வனப்பும் உடையவாமாறு, அவற்றைச் செப்பம் செய்து ஆக்குவது, அம்மம்ம எவ்வளவு அருமை: ஒவ்வொரு நிலையிலும் நெடிது நாள் நின்று நின்று, படிப்படியாக முன்னேற, எத்தனே ஆண்டுகள் கழிந்திருக்கும். எவ்வளவு ஊக்கமும், உழைப்பும் வேண்டியிருக்கும்

பொருளும் செயலும் பண்டு வளர்ந்த வகைகளே, இன்றைய உலகியல் நிலைகொண்டு மதிப்பிடல் கூடாது. கைக்கு எட்டாத ஒரு பொருளைக் கழியொன்றின் துணை