பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அந்நிலையில் அவன் கண்ட காட்சியொன்று அவன் மனக் கண்முன் தோன்றி மருட்டிற்று.

பெரிய மத யானைகள் இரண்டு மாறுபட்டுப் போரிடுகின்றன.அவை இரண்டும் மேற்கொண்ட போராட்டத்திற்குக் காரணமாகியது ஒரு சிறிய கயிறு.யானைகள் இரண்டும்,அக்கயிற்றின் இரு முனைகளையும் பற்றிக்கொண்டு ஈர்க்கின்றன.ஆற்றல் ஆண்மைகளில் இரண்டும் குறையுடையன அல்ல.அக்கயிற்றைப் பெறும் ஆசை, அவை இரண்டின் உள்ளத்திலும் நிலைத்து விட்டது.அதனால், ஒன்றற்கொன்று ஒரு சிறிதும் விட்டுக்கொடாதே பற்றி இழுக்கத் தொடங்கின. அந்நிலையில், அவற்றின் கைகளுக்கிடையே புதிய வலிய கயிறு சிக்குறினும் வலிவற்று அழிந்துபோம்.ஆனால் யானைகளுக்கிடையே அகப்பட்டு ஈர்க்கப்படும் அக்கயிறோ ஒரு பழங் கயிறு. யானைகள் வெற்றி காணும்வரை அழியாது நிற்பது அரிது.அது அவற்றின் ஈர்ப்பைத் தாங்கவல்ல திண்மை உடையதன்று. நைந்து தேய்ந்து போன புரிகளைக் கொண்டது அது; யானைகள்பற்றி ஈர்த்தபோதே அறுந்து அழிந்து போயிருக்க வேண்டியது; இதுகாறும் இருந்து ஈடு கொடுத்ததே அரிது; சிறிது சிறிதாக அறுந்து அழியவும் தொடங்கி விட்டது; இப்போதோ, இன்னமும் சற்று நாழிகையிலோ, அடியோடு அறுந்து போவது உறுதி; இந்தக் காட்சியே அவ்விளைஞன் கண்ட காட்சி.

அக்காட்சியைக் கடைசிவரைக் காணவும் முடியவில்லை அவனால்; உள்ளமும், அறிவும் ஒன்றோடொன்று