பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

'தினத்தனை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணுதே கினைத்தொறும் காண்டொறும் பேசுந்தொறும் ‘. .

- எப்போதும் அனைத்து எலும்பு உள்நெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்புடையானுக்கே சென்று தாய் கோத்தும்பி !”

s ஈண்டுக் காட்டிய திருக்கோவையார், திருவாசகச் செய் யுட்கள், அக்காலத்தே தோன்றிய சமய இலக்கியங்களின் இயல்பு இது என்பதைத் தெளிய உணர்த்தும் எடுத்துக் காட்டுக்களாம். அகப்பொருட்டுறை தழுவிய இலக்கியங் களே இயற்றும் ஆர்வம், மணிவாசகர் காலம்வரை மங்கா திருந்தது. அதன் பின்னர், அம்முறை மெல்ல மெல்ல வழக் கிறந்து போக, இலக்கியத் துறையில் புதுப்புது முறைகள் புகலாயின; பிற்காலத்தே, இலக்கியங்கட்கு இடையிடையே அவை ஒரு சிறிதே இடம்பெற, கேர்வை, உலா, அந் தாதி, கலம்பகம், மாலை, பிள்ளைத்தமிழ் போலும் புதியன பெரிதும் இடம் பெறத் தொடங்கிவிட்டன. கிற்க

கடைச் சங்க காலத்தின் பிற்பகுதியில் பிறந்த சமய இலக்கிய ஆர்வம், பனிரெண்டாம் நூற்றண்டுவரை தொடர்ந்து கில பெற்றிருந்தது என்ருலும், அல்வார்வம் கி. பி. நான்கு ஐந்து, ஆறு ஆகிய இந்நூற்றண்டுகளில், ஓரளவு வளர்ச்சி குன்றிக் கிடந்தது. அக்காலம், தமிழ்நாட்டு வரலாற்றில் ஒர் இருண்ட காலமாம். களப்பிரர் என்ற இனந்தெரிய ஒரு நாடோடிக் கூட்டம் தமிழகத்துள் புகுந்து அரசழித்து வாழ்ந்த காலம் அது. அதன் விளைவால், தமிழ்ப் பேரரசுகள் அழிந்தன: தமிழர் பெரு வாழ்வு மறைந்தது. அக்கால அரசியல் ஆகிலேயின அறிந்து கொள்