பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசனம்

திருப்பிக்கொண்டு வர rமல், மீண்டும் மே ஓனைகளுக்கும் சீர்களுக்கும் தன்னையும் அறியாமல் அடி.5கியப்படுத்தும் முயற்சியாகவே தென்படுகிறது. எனினும் அந்த வசனம் நல்ல வசனம்; ஜீவ களை இழக்காத உ... N>; நடை. தன் ரைப்போலவே நச்சினார்க்கிலசியரும் பபிமேலழகரும் இப்படி வசனத்தைக் கையாளும் உரையாசிரியர்களாகவே திகழ்ந்த னர்.

மேலும் தமிழில் சாசனக் கல் வெட்டுக்களிலும் வசனமே கையாளப்பட்டு வந்திருக்கிறது. தஞ்சை ராஜ ராஜ சோழன் காலத்துக்கு முன்னதாக தமிழில் 'சாசனக் கல் வெட்டுக்கள் எல்லாம் வசனத்திலேயேதான் அமைந்திருந்தன. ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் சாசனக் கல் வெட்டுடன் மெய்க்கீர்த்தி என்று சொல்லப்படும்" பாடல் வகையும் சேர்ந்து பிறந்தது. ஆகவே அதற்கு முன்னும் 1பின்னும் உள்ள கல்வெட்டுச் சாசனங்களிலும், தமிழ் வசனமே கையாளப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் பிறகுதான் பிறநாட்டு நூல்களைத் தமிழில் கொண்டுவரும்போதேனும் வசன நடையைக் கை யாளலாம் என்ற துணிவும் ஆர்வமும் பிறந்தது. இந்த ஆர்வத்தின் விளைவாக விளைந்ததுவே சிவஞான சுவாமிகளின் தகுக்க சங்கிரகம்.

ஆகவே தமிழில் 150 வருஷ காலமாகத்தான் தமிழ் வசனதடை வளர்ந்து வருகின்றது என்று ஒரேயடியாய்* சொல்ல முடி யாது. தமிழின் பண்டை கால்களிலும் வசனம் இருக்கத்தான்" செய்கிறது. எனினும் நமது பண்டைப் புலவர்கள் தமிழ் வழக்கை இலக்கியத்துக்குள் கொண்டு வரவே இல்லை; அதற்கு, முன்கூறிய வைதிக மனப்பான்மையே காரணமா யீருேக்க முடியும்..

121