பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் பிறந்த கதை

கிடைக்கிறது. உலக இலக்கியத்தில் இப்படிப் பெயர் பெற்றவர் பலர். உலக மகா சிருஷ்டி கர்த்தாக்களின் நூல்களை நாம் நேரடியாகவும் மொழிபெயர்ப்பு மூலமாகவும் படித்திருக்கிறோம். ஷேக்ஸ்பியர், கம்பன், மில்டன் முதலி யோரெல்லாம் மனித உள்ளத்தின் ஆழத்தின், மனித சமுதாயம் சிந்திக்க ஆரம்பித்த காலத்திலிருந்து, சிக்கல் அவிழாமல் கிடக்கும் எண்ணங்களின் குணபாவத்தைத்தான் தங்கள் நூல்களில் வடித்திருக்கிறார்கள். ஆனால் அவைக ளெல்லாம் பரிசோதனைகள் ; மிஞ்சியவை அதன் மூலம் கிடைக்கும் அனுமானங்கள்தான். அவை அனுமானங்கள் என்று கூறினால், வருத்தமடைவோர் உண்டு. இருந் தாலும் அவை வெறும் பரிசோதனைகளிலிருந்து எழுந்த அனுமானங்கள் தான். : உ ல க இலக்கியங்களின் சிரஞ்ஜீ வித்துவமே, எந்த விதமான காலதேச வர்த்தமானத்தாலும் சிதைவுபட்டுவிடாத. மனித குணங்களை அடிப்படையாகக் கொண்டவற்றைப் பொறுத்ததுதான். உலக மகா சிருஷ்டி கர்த்தர்கள் இதைத்தான் செய்திருக்கிறார்கள்.

மேலும், மனித சமுதாயம் என்றைக்கும் எட்ட முடி. யாத குணபாவங்களை, லஷிய வடிவங்களாகிய பாத்திர சிருஷ்டியில் தேக்கி விடுகிறார்கள். இந்த லக்ஷிய வடிவம் ஒரு ர ர ம னா க ேவா , 'புரூட்டஸாகவோ இருக்கலாம். அவர்களை நாம் சாதாரண மனிதவர்க்கத்தோடு ஒப்பிட முடியாது; ஒப்பிடக் கூடாது. ஆனால், அந்த வழிய வுடி. வங்களை ஆராய்ந்து பார்த்தால் அவை மனிதன் அடைய விரும்பும் . நித்ய ஆசைகளின் கல்யாண ரூபமாகத்தான் தோன்றும். அவர்கள். ம னி த ர் க ள ாக உலவுவதில்லை. எனினும் மனிதன் என்ற பிராணி அவர்களைத் தன் வர்க்கத்

5: