பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் பிறந்த கதை

தமிழ்க் காவிய லக்ஷணங்களை விமர்சன ரீதியில் சீர் தூக்கி எடைபோட்டுப் பார்ப்பதற்குத் த மி ழ னு ைடய துலைக்கோல் சரியில்லை என்றே சொல்லலாம். நம் ஊர் தராசும் படியும் இல்லையென்பதற்காக மேல் நாட்டு பாலென்ஸைக் கொண்டு பவுண்டுக் கணக்குப் பார்க்க முடியாது. இலக்கிய விவகாரம் அவ்வளவு சுளுவில் நிறைபோடக் கூடிய விஷயம் அல்ல; ஆசிரியனின் மதிப்பையும், வெள்ளி நாண யத்தை ஸ்டர்லிங் கணக்கில் பதிவு செய்யும் பொருளாதாரத் தகிடுதத்தம் போல் அளவிட்டுவிட முடியாது. இந்த இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலம் கற்ற தமிழர்' சிலர் முயல்கிறார்கள். அது தப்பு.

5|