பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிந்து பிரயோகிக்கிறான். ராமன்

- போயினன் என்ற போழ்தத்தே ஆவிபோனான் என்று தசரதனின் மர ணத்தைக் கம்பன் குறிப்பிடும்போது, ' போயே போனான்' என்ற வார்த்தையில் இருந்த வேகத்தைவிட, பன்மடங்கு வேகத்தை நாம் உணர முடிகிறதல்லவா? நாணயங்களைப் போலப் பழகிப் பழகி உருவழிந்து மெருகேறிப் போன 6மரர்த்தைகள் கவிதையிலே வரும்போது, நம்மையே ஏமாற்றி, புத்தம் புதிதாகத் தோன்றுவதுபோல் பிரமை தட்டு கிறதல்லவா? அது ஏன்? அந்த வார்த்தை வழக்கில், தனக்குரிய ஸ்தானத்தைவிட, க வி ைத யில் உயர்த்த பதவியை அடைகிறது; அதிகாரம் பெறுகிறது. அதனால் வலுவும், வேகமும் பெறுகிறது.

இந்த வலுவையும் வேகத்தையும் கவிஞன் எங்கிருந்து எப்படிப் புகட்டுகிறான்? இந்த வலுவையும் வேகத்தையும் கொண்டுவர, கவிஞனுக்கு இலக்கணம் யாப்பு முறை ஓரளவு பயன்படுகிறது. யாப்பு முறை வார்த்தைகளை மாத் திரை அளவில் தடுத்து நிறுத்தி, அதற்குப் புதிய வேகத் தைக் கூட்டித்தர உதவுகிறது. ராஜரத்தினம் பிள்ளை தோடி ராக ஆலாபனத்தை மூன்று மணிநேரம் வாசிக்கும்போது நமக்கு ஆனந்தம் உண்டாவானேன்? சுர ஸ்தானங் களையும் ராக மூர்ச்சைகளையும் தெரிந்த அந்த எல்லைக் கோட்டுக்குள்ளே அசகாய சூரத்தனங்கள் செய்வதனால் தான், அந்த நாத சஞ்சாரத்தைக் கேட்டு ஆனந்திக்கிறோம். சதுரங்கக் காய்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சக்தியை அளித்து, அவற்றைக் குறிப்பிட்ட எல்லைக் கோட்டு டுக்குள் உலவச் சொல்லி, பெரும் போர்களை நிகழ்த்தும் போதும் ஆன ந் த ம் உண்டாகிறது அல்லவா? அது போலத்தான் கவிதையிலும் வார்த்தைகளை அதனதன்

71.