பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கிய விமர்சனம் இடங்களில், ஒரு குறிப்பிட்ட வேலிக்குள் விளையாடச் செய்யும்போது அவற்றிற்கு வேகம் அதிகரிக்கிறது. அங்கு கீறி, வட்டாடும்போது அந்த வட்டுக்குள்ள பெரு மையும் சக்தியும், எப்படி பெருகுகிறதோ, அதுபோலவே பாப்பு முறையில் வார்த்தைகளின் வேகம் அதிகரிக்கிறது. அதல்தான் கவிதையை சிறந்த வார்த்தைகளைச் சிறந்த ஸ்தானங்களில் " அமைக்கும் வித்தையென்றும் (The best words in the best order) உள்ள உணர்ச்சி களை சப்த சித்திரத்தால் உருவாக்குவது கவிதை (The expression of human emotions in perfect form and m ) என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த யாப்பு முறை வார்த்தைகளுக்கு வேகம் மட்டுமா தருகிறது? வேகத்தையும் குறைப்ப தில்லையா? என்று சிலர் கேட்கலாம். இலக்கணத்துக்கு கவிஞன் அடிமையாகிவிட்டால், வார்த்தைகள் உள்வாங்கிச் சீற்றுத்தன் ஒலிக்கும். இலக்கணத்துக்குக் கவிஞன் அடிமையாகிவிடக் கூடாது. இலக்கணந்தான் கவிஞ னுக்கு அடிமையாகி, கைகட்டிச் சேவகம் புரியவேண்டும். அப்போதுதான் கவிவின் வேகம் யாப்பு கோப்பிலிருந்து திமிறிக் கொண்டு வெளிவரும். * இலக்கியங் கண்டதற் கிலக்கணம்' என்று நம் முன்னோர் சொல்லி வைத்தது இதனால்தான்.இலக்கணத்தைக் கவிஞன் தன் கைவசப் படுத்தினாலன்றி, கவிதையை சிருஷ்டிக்க முடியாது. இலக் கணம் பாஷைக்குத் தக்கபடி. நெளிந்து கொடுக்க வேண் ருயே ஒழிய, வார்த்தைகளைக் காயடித்து நபுஞ்சகமாக்கி விடக்கூடாது. எனினும், இந்த இலக்கணத்துக்கு அடிமை மாகி, இலக்கணமே பிரதானமாகக்கொண்டு ல் புலவர் கள் - குட்டிக்கரணங்கள் போடுவதையும் நாம் கண்டிருக் 7-2