பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருேம். பமகம் திரிபு ரதபந்தம் முதலிய ஜாலவித்தைகள் கவிதை அல்ல; அவைகளைக் கவிதை என்று ஒப்புக் கொள்ளவும் முடி. 4:ாது. சைக்கிள் ஓட்டப் பழகுவதுபோல், இலக்கணத்தில் நாம் சவாரி செய்யக் கற்றுக்கொள்லா வேண்டும். பழகிப்பழகி. நாம் சைக்கிளை ஓட்டுகிறோம் என்ற பிரக்ஞையே அற்று, சவாரி செய்வதுபோல், சைக்கின் நமது அடிமையாவதுபோல், இலக்கணமும் ஆகவேண்டும், பாஷையும் அப்படித்தான். பழகப் பழகத்தான் கைக் கடங்கும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும். நாம் பழக்கந்தான். அதனால் தான் இலக்கணத்தைப் படித்து! விட்டு, இலக்கியம், கவிதையைச் சிருஷ்டித்துவிட மூடி யாது, தேமாவும் புளிமாவும் கவிதையை உண்டாக்கிவிட முடி யாது. அவை வெறும் வாய்ப்பாடு; சூத்திரம், தாது புஷ்டி மருந்து சாப்பிட்ட 24 மணி நேரத்தில் வயோதிகம் மாறி வாலிபம் திரும்புவதுபோல், யாப்பிலக்கணத்தைக் கரைத்துக் குடித்தவுடன் வார்த்தைகளுக்கு வேகம் தந்து விட. முடியாது. பழக்கத்தினால், பாஷையின் வேகத்தை, நெளிவு சுழிவை, மூர்ச்சையைத் தெரிந்துகொண்டு, இலன் கணத்துக்கு அடிமையாகி விடாதபடி , இலக்கணத்தைத் தனக்கு அடிமைப்படுத்தி, எழுதுபவனே கவிஞனாக முடியும். அவன்தான் அணுவைத் துளைத்து ஏழு கடலையும் புகட்ட முடி யும்; வைட்டமின் மாத்திரைகளைப்போல, வார்த்தை களுக்குத் தனிப்பெரும் சக்தியும் ஊட்ட முடியும். .

- நல்ல கவிதையும், மட்டமான செய்யுளும் பாப்பு முறைக்குள் அடங்கியதாக இருக்கப்போய்த்தான், எது கவிதை, எது கவிதையற்ற வார்த்தைப் பத்தல் என்று தீர்மானிப்பதற்கு. பாஷையின் வளம் தெரிந்த விமர்சகர் களும் ரசிகர்களும் தேவைப்படுகிறார்கள். உண்மை ) ரன

இ. வி. 6,